போலீசுக்கு டிமிக்கி கொடுத்த செந்தில் பாலாஜி - கைது செய்ய தடை – உயர்நீதிமன்றம் அதிரடி...

Asianet News Tamil  
Published : Sep 27, 2017, 03:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
போலீசுக்கு டிமிக்கி கொடுத்த செந்தில் பாலாஜி - கைது செய்ய தடை – உயர்நீதிமன்றம் அதிரடி...

சுருக்கம்

high court ordered to police about senthil balaji case

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ய உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில்பாலாஜி. அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 95 லட்சம் மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது புகார் எழுந்தது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தது.

இதனிடையே செந்தில் பாலாஜி டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து தமது எம்.எல்.ஏ பதவியை இழந்து கர்நாடகாவில் உள்ள ரிசார்ட்டில் தங்கி உள்ளார்.

இதனால் போலீசார் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கர்நாடகா விரைந்தனர்.

ஆனால் செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கூறி மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் வரும் செவ்வாய் கிழமை வரை செந்திபாலாஜியை கைது செய்யக்கூடாது என கூறி உத்தரவிட்டுள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!