என்னை அவமானப்படுத்தாதீர்கள்...! கொந்தளிக்கும் சீமான்...

Asianet News Tamil  
Published : Sep 27, 2017, 03:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
என்னை அவமானப்படுத்தாதீர்கள்...! கொந்தளிக்கும் சீமான்...

சுருக்கம்

seeman speech about kamalahassan with angry

கமல் போன்றவர்கள் பற்றி கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தாதீர்கள் என்றும் அவர்கள் வரும்போது வரட்டும்  அப்போது பார்த்து கொள்ளலாம் எனவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெயர்வித்துள்ளார்.

தற்போது நடிகர் கமலஹாசன் எங்கு சென்றாலும் அரசியல் மட்டுமே பேசி வருகிறார். மேலும் தாம் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாகவும் அதற்கான கோடி, கட்சி பெயர் ஆகியன தயாராகி வருவதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக செய்தியாளர்கள் கமல் அரசியலுக்கு வந்தால் அவருடன் இணைவீர்களா என சீமானிடம் கேள்வி எழுப்பியபோது அவர்தான் எங்களுடன் வந்து இணைய வேண்டும் என தெரிவித்தார்.

ஏனென்றால் அரசியலுக்கு நாங்கள் தான் முதலில் வந்தோம் என விளக்கம் கூறினார் சீமான்.

இதையடுத்து கமலஹாசன் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், தமிழகத்தில் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் கமலின் அரசியல் பிரவேசம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த சீமான் ஆவேசத்துடன் கமல் போன்றவர்கள் பற்றி கேள்வி கேட்டு என்னை அவமானப்படுத்தாதீர்கள் என்றும் அவர்கள் வரும்போது வரட்டும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழக அரசு மின்சாரம் வாங்குவதற்கு 9 ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுவதில் முனைப்பு காட்டுகிறது எனவும் ஆனால் உற்பத்தி துறையில் அந்த தொகையை முதலீடு செய்ய மறுக்கிறது எனவும் குற்றம் சாட்டினார்.

PREV
click me!

Recommended Stories

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!
ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து கத்துக்கோங்க ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ட்வீட்!