அதிமுகவை வழி நடத்த உண்மையில் யாருக்கு உரிமை.? 35 ஆண்டுகளுக்கு முன்பு எம்.ஜி.ஆர். எழுதி வைத்த உயிலில் தீர்வு.!

By Asianet Tamil  |  First Published Jun 27, 2022, 8:51 PM IST

அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் யாருக்குக் கட்சியை வழி நடத்தும் உரிமை உள்ளது என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் எம்.ஜி.ஆர். எழுதி வைத்த உயில் பற்றி முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சசிகலா - ஓ. பன்னீர்செல்வம் என இரண்டாக உடைந்தது. பிறகு சசிகலாவை ஒதுக்கி வைத்துவிட்டு ஓ. பன்னீர்செல்வத்தோடு எடப்பாடி பழனிச்சாமி கைகோர்த்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக ஓபிஎஸ் - இபிஎஸ் முறையே ஒருங்கிணைப்பாளராகவும் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வந்தனர். ஆனால், தற்போது அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் பெரும்பான்மையான நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவை பெற்றுள்ள இபிஎஸ், பொதுச்செயலாளர் பதவியை நெருங்கிவிட்டார். இதற்காக ஜூலை 11 அன்று மீண்டும் பொதுக்குழு கூட்டத்தைக் கூட்ட இபிஎஸ் தரப்பு தீவிர ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

இதையும் படிங்க: அதிமுகவில் சாதி அரசியல்..எடப்பாடி பழனிசாமி யார் தெரியுமா? ஓபிஎஸ்சை விளாசிய அதிமுக பிரமுகர்!

Tap to resize

Latest Videos

ஆனால், இந்தப் பொதுக்குழுவை நடத்த விடாமலும் ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் உருவாகாமல் இருக்கவும் எல்லாவிதமான முயற்சிகளையும் ஓபிஎஸ் தரப்பு எடுத்து வருகிறது.  அதன் ஒரு பகுதியாக ஓபிஎஸ் தொண்டர்களைச் சந்திக்க சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். டெல்லியில் பாஜக உதவியுடன் ஏதாவது காரியம் சாதிக்க முடியுமா என்ற செயல் திட்டத்திலும் ஓபிஎஸ் இருக்கிறார். அதிமுக தொண்டர்களின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதில் ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பும் தினந்தோறும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதையும் படிங்க: பொது குழுவுக்கு பிறகு ஓபிஎஸ் செல்வாக்கு எகிறுகிறது.. எடப்பாடி முகாமை கதறவிடும் வைத்தியலிங்கம்

ஆனால், ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் நடக்கும் இந்தக் கூட்டம் செல்லாது என்றும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது என்றும் ஓபிஎஸ்  நேற்றே அறிக்கை வெளியிட்டிருந்தார். இதன்முலம் ஓபிஎஸ்  - இபிஎஸ் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ஜூலை 11 அன்று ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றி, பொதுச்செயலாளர் பதவியைப் பிடிக்கும் முஸ்தீபுகள் இபிஎஸ் தரப்பில் சூடுபிடித்துள்ளன. இந்நிலையில் கட்சி பிளவுப்பட்டால், அதிமுகவை வழி நடத்தும் பொறுப்பு யாருக்கு இருக்கும் என்று அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர். 1987-ஆம் ஆண்டில் எழுதி வைத்த உயிலில் குறிப்பிட்டுள்ள அம்சத்தை அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவுக்கு புதிய சிக்கல்.. உள்ளாட்சி இடைத்தேர்தல் படிவத்தில் கையெழுத்திடுவது யார்.? குழப்பத்தில் ர.ரக்கள்!

அந்தப் பதிவில், “புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் 18.01.1987அன்றைய தேதியில் அதிமுகவில் உள்ள உறுப்பினர்களில் 80% பேர் ஆதரவைப் பெற்றவர்கள் தலைமையில் கட்சி வழி நடத்த வேண்டும் என்று தன்னுடைய உயிலில் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் எம்ஜிஆர் தொண்டர்களால் ஒரு தலைமையைத் தேர்ந்தெடுப்போம். நிச்சயமாக அது இந்த சுயநலவாதிகளும், அடிமைகளும், ஊழல்வாதிகளும் அல்லாத தலைமையை தேர்ந்தெடுப்போம்" என்று பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார். எம்.ஜி.ஆர். எழுதிய உயிலின் அம்சத்தையும் கே.சி. பழனிச்சாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

1/2)புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டால் 18.01.1987அன்றையதேதியில் அதிமுகவில் உள்ள உறுப்பினர்களில்80%பேர் ஆதரவைபெற்றவர்கள் தலைமையில் கட்சிவழிநடத்த வேண்டும் என்றுதன்னுடைய உயிலில்குறிப்பிட்டுள்ளார் அதன்அடிப்படையில் எம்ஜிஆர் தொண்டர்களால்ஒரு தலைமையைதேர்ந்தெடுப்போம்.

— K C Palanisamy (@KCPalanisamy1)

2/2)நிச்சியமாக அது இந்த சுயநலவாதிகலும்,அடிமைகலும்,ஊழல்வாதிகலும் அல்லாத தலைமையை தேர்ந்தெடுப்போம். pic.twitter.com/FaaATIWZvJ

— K C Palanisamy (@KCPalanisamy1)
click me!