என்னது.. இந்த ஒரு மீன் 13 லட்சமா..!!! 1 கிலோ 26 ஆயிரமா.?? அப்படி என்னங்க இருக்கு இதுல..???

By Ezhilarasan BabuFirst Published Jun 27, 2022, 8:05 PM IST
Highlights

மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூரிலுள்ள திகா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 55 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான டெலிய போலா மீன்  13 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்கு மிட்னாபூரிலுள்ள திகா என்ற இடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 55 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான டெலிய போலா மீன்  13 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த மீன் உயர் சிகிச்சைக்கான மருந்துகள் தயாரிக்க பயன்படுவதால் இந்த அளவுக்கு அதிக விலைக்கு விற்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். இந்த மீன் ஒரு கிலோ 26 ஆயிரம்  ஆகும். 

இதையும் படியுங்கள்: ஓடி வந்து கைக்கொடுத்த அமெரிக்கா அதிபர்… மாஸ் காட்டிய பிரதமர் மோடி… ஜெர்மனியில் சுவாரஸ்யம்!!

Latest Videos

மீன்களில் பல வகைகள் உண்டு, பெரும்பாலும் மீன்கள் புரதச் சத்து மிகுந்த உணவு ஆகும், உணவுக்காக பிடிக்கப்படும் மீன்கள் ஒருபுறம் என்றால் மருந்து மற்றும் மருத்துவ ஆராய்ச்சி போன்றவற்றிற்கு பயன்படுத்தும் மீன்களும் தனி ரகம். இந்த வரிசையில் மேற்கு வங்கம் மிட்னாபூரில் தெற்கு நைனான் பகுதியைச் சேர்ந்த சிவாஜி கபீர் என்பவர் வலையில் 55 கிலோ எடையுள்ள டெலிய போலா என்ற அரிய வகை ராட்சத மீன் சிக்கியது. இந்த மீன் திகா மீன் சந்தைக்கு கொண்டு வரப்பட்டது, மூன்று மணி நேரம் இந்த மீனுக்கு விலை ஏலம் கூறப்பட்டு வந்த நிலையில் பல உயர் ரக மருந்துகள் தயாரிப்புக்கு பயன்படும் இந்த மீன் இறுதியாக 13 லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டது.

எஸ் எஃப் டி என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனம் இந்த மீனை வாங்கியது. இந்த மீனின் மொத்த எடை 55 கிலோ ஆகும். இது குறித்து தெரிவித்தார் உள்ளூர் மீனவர்கள் இந்த மீன் டெலிய போலா கலப்பினம் ஆகும், டெலியா போல விலையுயர்ந்த மருந்துகளை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்படும் மீன் வகை ஆகும், ஆண் பெண் மற்றும் இரு பாலின மீன் வகைகளும் இதில் உண்டு, இந்த டெலியா போலாஅதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த மீனின் வயிற்றில் மிக உயர்ந்த தரமான சிறுநீர்பை உள்ளது. அதில் இருந்து மிக முக்கிய மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. அதேபோல் இரு பாலின டெலியா போல வின் சிறுநீர்ப்பை மருந்து தயாரிப்பிற்கு அதிக பயனுள்ளதாக உள்ளது. இந்த மீன் வட்டார வழக்கில் கச்சர் போலா  என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: பொது குழுவுக்கு பிறகு ஓபிஎஸ் செல்வாக்கு எகிறுகிறது.. எடப்பாடி முகாமை கதறவிடும் வைத்தியலிங்கம்.

திகா கடற்கரையில் பிடிபட்ட இந்த மீன் ஒரு பெண்ணினமாகும், 55 கிலோ எடை கொண்ட இந்த மீன் முட்டைக்கு ஐந்து கிலோ கழிக்கப்பட்டு வெறும் 50 கிலோவாக கணக்கிடப்பட்டது, ஒரு கிலோ மீன் கிட்டத்தட்ட 26 ஆயிரம் ரூபாய்க்கு  கணக்கிடப்பட்டுள்ளது. இதுகுறித்து கடைக்காரர் கார்த்திக் பேரா கூறுகையில், இந்த மீன் கர்பம் தரித்த மீன் அதனால்தான் அதன் வயிற்றில் அதிகளவில் முட்டைகள் இருப்பதால் இந்த டெலியா போலாவின் சிறுநீர்ப்பை சிறிய அளவில் உள்ளது. கடந்த ஆறு நாட்களுக்கு முன்புகூட 30 கிலோ எடையுள்ள ஆண் டெலியா போல ரூபாய் 50 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த மீன் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்தப் பகுதிக்கு வருகிறது, இந்த மீனை பிடிக்கும் மீனவர்கள் ஒரே நாளில் பணக்காரர்களாக மாறி விடுவார்கள். அந்த அளவிற்கு இது அதிர்ஷ்டம் தரும் மீன் என அவர் கூறினார். இந்த அரியவகை டெலியா போலா மீனை பார்க்க சந்தையில் ஏராளமானோர் கூடி நின்று ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!