அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக ஆக்சன் கூடாது... அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்... ஆடிப்போன உத்தவ் தாக்கரே.

By Ezhilarasan BabuFirst Published Jun 27, 2022, 5:17 PM IST
Highlights

சிவசேனாவின் 16 அதிருப்தி எம்எல்ஏக்களை ஜூலை 11ஆம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவசேனாவின் 16 அதிருப்தி எம்எல்ஏக்களை ஜூலை 11ஆம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்றும், அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது உத்தவ் தாக்கரே தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டது சிவசேனா, மொத்தம் 288 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட அங்கு ஆட்சி அமைக்க 145 எம்எல்ஏக்களின் ஆதரவு வேண்டும், ஆனால் தேர்தலுக்குப் பின்னர் யார் தலைமையில் ஆட்சி அமைப்பது என்ற மோதலில்  பாஜகவுடன் ஏற்பட்ட முறிவு காரணமாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சி அமைத்தது.

இதையும் படியுங்கள்:  சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை சம்மன்... அதிர்ச்சியில் உத்தவ் தாக்கரே.

இந்நிலையில் சிவசேனா கட்சியில் இருந்து  ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 அதிருப்தி எம்எல்ஏக்கள் பிரிந்துள்ளனர். கடந்த பல நாட்களாக குஜராத் மற்றும் ஆசாமிகள் அவர்கள் முகாமிட்டு இருந்து வருகின்றனர். இதனால் மகாராஷ்டிர அரசில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் உத்தவ் தாக்கரே ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் தங்களது பலத்தை காட்டும் வகையில் ஆங்காங்கே போராட்டம், வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்ற பிரதமர் மோடி… அந்நாட்டு அதிபருடன் சந்திப்பு!!

இந்நிலையில் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 16 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என சபாநாயகருக்கு சிவசேனா கேட்டுக்கொண்டுள்ளது. அதேபோல் 16 எம்எல்ஏக்களையும் விளக்க  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்றும், அது தொடர்பான நோட்டீஸ் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அந்த 16 பேரின் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது இந்நிலையில் உத்தவ் தாக்கரே அரசுக்கு தங்களது ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்டதாகவும், எனவே மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர்கள் அதில் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த வழக்கு மீது மகாராஷ்டிரா அரசு,  மகாராஷ்டிர துணை சபாநாயகர், மகாராஷ்டிர சட்டசபை என அனைத்து தரப்பும்  பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அதுவரை குறிப்பிட்ட 16 அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்றும் அதே நேரத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு எம்எல்ஏக்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்திருப்பது உத்தவ் தாக்கரே தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!