ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் யார்.? எடப்பாடி சொன்ன 3 நாட்கள் - இதுதான் காரணமா?

By Raghupati RFirst Published Jan 28, 2023, 9:20 PM IST
Highlights

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால் தமிழ்நாடு அரசியல் களத்தில் அனலை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் வரும் 31 ஆம் தேதி தொடங்க உள்ளது.

வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய பிப்ரவரி 7 ஆம் தேதி கடைசி நாளாகும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. எனினும் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேமுதிக, அமமுக வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தை தொடங்கியுள்ளன.

இதையும் படிங்க..கள ஆய்வில் முதலமைச்சர்.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் - முதல்வர் ஸ்டாலின் அடித்த அடுத்த சிக்சர் !!

பாஜக போட்டியிடாது என்பதை சூசமாக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இருந்தாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. வேட்பாளரை முதல் ஆளாக அறிவித்த காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலால், உட்கட்சி பூசல் அடுத்தக்கட்டத்திற்கு சென்றுள்ளது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டமன்றதொகுதி இடைத்தேர்தலில் அதிமுக யாருடன் கூட்டணி வைக்கப்போகிறது என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி இன்னும் 3 நாட்களில் அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க..Adani: 1.45 லட்சம் கோடி போச்சு.! பணக்காரர் பட்டியலில் பின்னடைவு - அடுத்த விஜய் மல்லையாவாக மாறுகிறாரா அதானி?

click me!