அமைச்சர்கள் பணம் கேட்டால் கொடுங்கள்; மேடையிலேயே கமிசன் குறித்து பேசிய டி.ஆர்.பாலு

By Velmurugan sFirst Published Jan 28, 2023, 3:55 PM IST
Highlights

சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தமிழகத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி ஒதுக்க மறுப்பதாக அதிகாரிகள் புகார் தெரிவிப்பதாக மேடையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திராவிடர் கழகம் சார்பில் திறந்தவெளி பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, எம்.பி. டி.ஆர்.பாலு, திருமாவளவன், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தற்போது நடைபெற்று வரும் திமுக அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் பழனிவேல் தியாகராஜன் அரசின் பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களில் நிதி ஒதுக்குவதில் மிகவும் கண்டிப்பு காட்டுவதாகவும், இதனால், பிற அமைச்சர்களுக்கான கமிசன்கள் தடை படுவதாகவும் குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் டி.ஆர்.பாலு பேசியிருப்பது அனைவரிடத்திரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

150 ஆடு, 500 கோழி; கம கம பிரியாணி வாசனையுடன் அரங்கேறிய முனியாண்டி கோவில் திருவிழா

பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு பேசுகையில், மக்களின் திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் முதலில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நான் அமைச்சராக இருந்தபோது அப்படி தான். அதையும் மீறி தான் திட்டங்களை கொண்டு வந்தேன். தமிழகத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதி ஒதுக்க மறுப்பதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். அதிகாரிகள் சொல்வதை கேட்டு கொடுக்காமல் இருக்காதீர்கள் என்று அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தியை பார்த்து கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசுகையில், நான் மத்திய அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு நன்மை தரக்கூடிய சேது சமுத்திர திட்டத்தை கொண்டுவர தீவிரமாக பாடுபட்டேன். ஆனால் ராமர் பாலம் இருப்பதாகக் கூறி சிலர் தடுத்துவிட்டனர். ராமேஸ்வரம் கோவிலுக்குள் இருந்த 3 தீர்த்தங்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் இடம் மாற்றி வைக்கப்பட்டது. இது மத நம்பிக்கையை பாதிக்காதா? 

சென்னையில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்

நான் தலைவர்களை மதிப்பவன். நான் தலைவராக மதிப்பவர்களை யாராவது சீண்டினால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டேன். ஆசிரியர் வீரமணி மீது யாராவது கை வைத்தால் அவர் சும்மா இருப்பார். ஆனால், நான் அவன் கையை வெட்டுவேன். உடல் பலம் உள்ளவன். நிச்சயம் வெட்டுவேன் என்று பேசி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

click me!