43 ஆண்டுகள் கழித்து திமுகவுக்கு புதிய பொதுச்செயலாளர்... திமுகவில் முட்டி போதப்போகும் பெருந்தலைகள்!

By Asianet TamilFirst Published Mar 8, 2020, 9:46 PM IST
Highlights

திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “பொதுச்செயலாளரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும்வரை கட்சித்தலைவர், பொதுச்செயலாளர் அதிகாரத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கட்சி விதியில் உள்ளது. தற்போது பொதுச்செயலாளர் இல்லை. எனவே, புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும்வரை கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுச்செயலாளர் அதிகாரத்தை வைத்திருப்பார்” என்று தெரிவித்தன.  
 

க.அன்பழகனின் மறைவால், நாற்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து திமுகவின் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யப்படும் நிலைக்கு அக்கட்சி தள்ளாப்பட்டுள்ளது.
திமுகவில் மிகப் பெரிய இரண்டு கட்சிப் பதவிகள் தலைவர், பொதுச்செயலாளர். கடந்த 40 ஆண்டுகளாகப் பொதுச்செயலாளர் பதவி எந்தப் பிரச்னையும் இல்லாமல் க.அன்பழகனின் கையில் இருந்தது. 1977-ம் ஆண்டில் திமுக பொதுச்செயலாளராக இருந்த நெடுஞ்செழியன் கட்சியிலிருந்து வெளியேறி மக்கள் திமுக என்ற கட்சியைத் தொடங்கினார். அப்போது பொதுச்செயலாளர் பதவி காலியானது. 
இதனையடுத்து க. அன்பழகன் திமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக ஆனார். இதனையடுத்து 1978-ல் கட்சி அமைப்புத் தேர்தல் மூலம் அன்பழகன் முறைப்படி திமுக பொதுச்செயலாளர் ஆனார். கடைசியாக 2015-ல் அமைப்புத் தேர்தல் மூலம் கட்சி பொதுச்செயலாளராக அன்பழகன் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 43 ஆண்டுகளாக பொதுச்செயலாளராக இருந்த அன்பழகனின் மறைவு திமுகவில் 4 தசாப்தங்கள் கழித்து புதிய பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக திமுக வட்டாரங்களில் விசாரித்தபோது, “பொதுச்செயலாளரால் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டு புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும்வரை கட்சித்தலைவர், பொதுச்செயலாளர் அதிகாரத்தை வைத்துக்கொள்ளலாம் என்று கட்சி விதியில் உள்ளது. தற்போது பொதுச்செயலாளர் இல்லை. எனவே, புதிய பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படும்வரை கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுச்செயலாளர் அதிகாரத்தை வைத்திருப்பார்” என்று தெரிவித்தன.  
தற்போது திமுகவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. ஏற்கனவே வெளியிடப்பட்ட அட்டவணைபடி ஆகஸ்ட் மாதத்துக்குள் தலைவர் பதவி தவிர்த்து எல்லாப் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. செப்டம்பரில் கட்சித் தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. எனவே, திமுகவின் புதிய பொதுச்செயலாளர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய பொதுச்செயலாளராக துரைமுருகன் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.


இதுதொடர்பாக கட்சி வட்டாரங்களில் விசாரித்தபோது, “தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கமாக உள்ள யார் வேண்டுமானாலும் கட்சி புதிய பொதுச்செயலாளராக ஆகலாம். பொதுச்செயலாளார் பதவி என்பது கட்சியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி. எனவே, துரைமுருகன், ஐ.பெரியசாமி, எ.வ.வேலு ஆகியோரில் ஒருவர் பொதுச்செயலாளராகலாம்” என்று தெரிவித்தன.

click me!