ரஜினி, கமல், திமுக கூட்டணி அமைத்தாலும் கவலையில்லை.. ஒற்றையாக அதிமுக எதிர்க்கும்.. அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி!

By Asianet TamilFirst Published Mar 8, 2020, 9:04 PM IST
Highlights

“அதிமுக தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளது. 1972-ல் எம்.ஜி.ஆர். சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா சபதம் போட்டு வெற்றி பெற்றார். அதேபோல ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சவால்களையும் அதிமுக வெல்லும்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார். 

ரஜினி, கமல், திமுக கூட்டணி அமைத்தாலும் அதிமுக ஒற்றையாக எதிர்கொள்ளும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஔவையார் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், சரோஜா, பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.


 “அதிமுக தொடர்ந்து பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளது. 1972-ல் எம்.ஜி.ஆர். சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். 30 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா சபதம் போட்டு வெற்றி பெற்றார். அதேபோல ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள சவால்களையும் அதிமுக வெல்லும்” என்று ஜெயக்குமார் தெரிவித்தார். தனக்கு ஒரு விஷயத்தில் ஏமாற்றம் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்ததைப் பற்றி ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், “நடிகர் ரஜினிகாந்த் எந்த விஷயத்தில் ஏமாற்றம் அடைந்தார் என்று எனக்கு தெரியாது. ரஜினி, கமல், திமுக கூட்டணி அமைத்து வந்தாலும், அதிமுக ஒற்றையாக எதிர்கொள்ளும்” எனத் தெரிவித்தார்.

click me!