கொரோனா இருப்பது உறுதியானால் விடுமுறையுடன் ஊதியம்.... முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு.!!

By Thiraviaraj RMFirst Published Mar 8, 2020, 9:13 PM IST
Highlights

கொரோனா வைரஸ் போர் இந்தியாவிற்கும் படையெடுத்திருக்கிறது. இந்த போரில் இந்திய அரசும்,கொரோனா வைரஸ்ம் மோதிக்கொண்டிருக்கிறார்கள்.இந்த வைரஸ் இந்திய மருத்துவதுறைக்கு சவாலானது தான். சீனா போல் நம் இந்தியா துரிதமான அளவிற்கு செயல்பட முடியுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

T.Balamurukan

இந்தியாவில், கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து மாநிலங்களும் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு உத்தர விட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 39 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அண்டை வீடுகளில் வசிப்பவர் யாரேனும் வெளிநாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் வந்திருந்தால் அவர்கள் தொடர்பான தகவலை அரசுக்கு தெரிவிக்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.  

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ,  மேலும் கொரானா வைரஸ் அறிகுறிகளுடன் தீவிர கண்காணிப்பில் இருக்கும் நபர்களுக்கு நிறுவனங்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என்றும், இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்கும் என்றும் கெஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார். 
 
click me!