யார் இந்த ஜெகத்ரட்சகன்.?அரசியலில் உயர்ந்தது எப்படி.? சொத்து மதிப்பு என்ன தெரியுமா.? தலை சுற்றவைக்கும் தகவல்கள்

By Ajmal Khan  |  First Published Apr 18, 2023, 2:55 PM IST

திமுக நிர்வாகியான ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50,219.37 கோடி சொத்து இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சொத்து பட்டியல் வெளியிட்ட நிலையில், யார் இந்த ஜெகத்ரட்சன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 


திமுக நிர்வாகிகள் சொத்து பட்டியல்

திமுக நிர்வாகிகளான ஜெகத்ரட்சகனுக்கு ரூ.50,219.37 கோடி, எ.வ.வேலுவுக்கு ரூ.5,552.39 கோடி, கே.என்.நேருவுக்கு ரூ.2,495.14 கோடி, கனிமொழிக்கு ரூ.830.33 கோடி, கலாநிதி மாறனுக்கு ரூ.12,450 கோடி என மொத்தமாக திமுகவின் சொத்து மதிப்பு ரூ.1.34 லட்சம் கோடி என கடந்த வாரம் அண்ணாமலை பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

இது அரசியல் வட்டாரத்தில் மட்டுமில்லாமல் பொதுமக்களையும் ஆச்சர்யம் பட வைத்தது. அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலின் படி பார்த்தால் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகனுக்கு மட்டும் 50 லட்சம் கோடி அளவிற்கு சொத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மற்ற 16 நிர்வாகிகளில் 50% சொத்து இருப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில் யார் இந்த ஜெகத்ரட்சகன் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியா.? தேர்தல் ஆணையத்தில் புதிய மனு கொடுத்து செக் வைத்த ஓபிஎஸ்

எம்எல்ஏ முதல் மத்திய அமைச்சர் வரை

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலிங்கமலை என்னும் ஊரில் பிறந்தவர் ஜெகத்ரட்சகன். ஆரம்பத்தில் அதிமுகவில் இருந்தபோது,  தன்னுடைய அரசியல் வாழ்வில் 1980ஆம் ஆண்டு முதன்முதலாக தமிழக சட்டமன்ற உறுப்பினரானார். 1984 ஆம் ஆண்டு அதிமுக கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்று  மக்களவை உறுப்பினரானார். 1998ம் ஆண்டு அரக்கோணம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் ஆர்.எம்.வீரப்பன் அதிமுகவிலிருந்து வெளியேறி எம்.ஜி.ஆர். கழகத்தை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்து செயல்பட்டார் ஜெகத்ரட்சகன். இதனை தொடர்ந்து தனியாக வீர வன்னியர் பேரவை மற்றும் ஜனநாயக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை நடத்தி வந்தார்.

திமுகவில் இணைந்த ஜெகத்ரட்சகன்

அப்போது திமுக தலைவர் கருணாநிதி மீது இருந்த நெருக்கம் காரணமாகவும் அவர் மீது கொண்ட பற்று காரணமாக ஜனநாயக முன்னேற்ற கழகத்தை  2009இல் திமுகவுடன் இணைந்தார். இதனை தொடர்ந்து 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து மாநில, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராகவும், மாநில, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.  தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி 2007 ஆம் ஆண்டு தன்னுடைய நிறுவனத்திற்கு அதிக அளவிலான நிலக்கரி ஒதுக்கீடு செய்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

வெட்புமனுவில் சொத்து பட்டியல்

இதனிடையே 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்த ஜெகத்ரட்சகன், 2019 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் வேட்புமனுவின் போது, தனக்கு ரூ.115 கோடி மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக ஜெகத்ரட்சகன் கூறி இருந்தார். அவருடைய பெயரில், ரூ.2 கோடியே 63 லட்சத்து 43 ஆயிரத்து 519 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.10 கோடியே 99 லட்சத்து 7 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளன. அவரின் மனைவி அனுசுயா பெயரில் ரூ.43 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரத்து 747 மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.57 கோடியே 91 லட்சத்து 4 ஆயிரத்து 631 மதிப்பில் அசையா சொத்துகளும் உள்ளதாக தெரிவித்து இருந்தார்.  

மருத்துவ கல்லூரிகள்

இதனிடையே தமிழகத்தில் ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், வீட்டு மனை, வீடு உள்ளிட்ட ரூ.89.19 கோடி மதிப்புடைய  சொத்துக்களை அமலாக்கத்துறை கடந்த 2020ஆம் ஆண்டு முடக்கி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் திமுக எம்பியான ஜெகத்ரட்சகன் தமிழகத்தில் மட்டுமில்லாமல் பல மாநிலங்களிலும் தனது கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். பாரத் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை பள்ளிக்கரணையில் உள்ள ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை,

கடல் போல் காட்சியளிக்கும் கால்டன் சமுத்திரா

ஸ்ரீபாலாஜி பல் மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, புதுச்சேரி ஸ்ரீலட்சுமி நாராயண மருத்துவ அறிவியல் கழகம், பாரத் அறிவியல், தொழில்நுட்பக் கழகம், ஸ்ரீபாலாஜி பிசியோதெரபி கல்லூரி, ஸ்ரீபாலாஜி நர்சிங் கல்லூரி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகிறது. இது மட்டும் இல்லாமல் சென்னையில் அக்கார்டு ஓட்டலும், மகாபலிபுரத்தில் கால்டன் சமுத்ரா ஐந்து நட்சத்திர பேலஸ் அணைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் வகையில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

தொடரும் வருமான வரி சோதனை

பல கோடி சொத்துக்கள் இருப்பதால் வரி ஏய்ப்பு புகார் காரணமாக வருமானவரித்துறை பல முறை திமுக எம்பியான ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியும் உள்ளது. தமிழகத்தில் அரசியலில் சாதித்த ஜெகத்ரட்சகனுக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற கனவும் இருந்தது. இதற்காக புதுவையில் திமுக சார்பாக முதலமைச்சர் ஆகலாம் என திட்டமிட்டவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் சென்றது ஏமாற்றமே. இருந்த போதும் முதலமைச்சர் என்ற கனவோடு தொடர்ந்து நடைபோட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்

கர்நாடக தேர்தலுக்காக கட்டுக்கட்டாக பணத்தோடு ஹெலிகாப்டரில் வந்தேனா.? புகாருக்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை

click me!