ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கத்துக்கு அனுமதி தந்தது யார்? ஆதாரத்தை வெளியிட்ட பிக் பாஸ் காயத்ரி!

First Published May 25, 2018, 10:58 AM IST
Highlights
Who gave permission to expand the Sterlite plant Big boos Gayatri released


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த பயங்கரமான படுகொலைக்கு தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அனைத்து

எதிர்க்கட்சிகளும், திரைத்துறைப் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வரும்  நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விஷயத்தில் தமிழக மக்களின் முதுகில் குத்தியது காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகள் தான் என நடன இயக்குனரும் பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றவருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் நடத்திய மக்களை நோக்கி போலீசார் சுட்டதில் 13 பேர் பலியாகினர்.

இந்நிலையில், காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகள் நம் முதுகில் குத்திவிட்டதாக காயத்ரி ரகுராம் கூறுகிறார். ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய அனுமதி அளித்தது பாஜக அரசு அல்ல காங்கிரஸ் அரசு தான் என்று கூறி அதற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

காங்கிரஸ் தான் செய்த குற்றத்தை நியாயப்படுகிறது என்றும், காங்கிரஸ் தொண்டர்களுக்காக பாவப்படுவதாகவும் டிவீட் போட்டுள்ளார்.

மக்களின் போராட்டத்தால் காங்கிரஸ் மற்றும் திராவிடக் கட்சிகளின் உண்மை முகம் தெரிந்துவிட்டது. ஜல்லிக்கட்டு, ஹைட்ரோகார்பன், ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் அதனால் தான் பெரிய ஆட்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. வீட்டில் பத்திரமாக இருந்து கொண்டு அப்பாவி மக்களை தூண்டி விடுகிறார்கள்.

மேலும், மற்றொரு பதிவில், “திராவிடக் கட்சிளை நம்பிய நம் மக்களை முதுகில் குத்திவிட்டன என்பதை ஏற்றுக் கொள்வது கஷ்டம். எல்லாமே அரசியல் படுத்தும் பாடு தான்” என்கிறார் என பதிவிட்டுள்ளார் காயத்ரி.

click me!