தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது - அரசு பேருந்துகள் இயக்கம்

Asianet News Tamil  
Published : May 25, 2018, 10:37 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புகிறது - அரசு பேருந்துகள் இயக்கம்

சுருக்கம்

government buses will be run in thoothugudi

தூத்துக்குடியில் மக்கள் போராட்ட்த்தை கட்டுப்படுத்த முடியாமல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அரசு 144 தடை உத்தரவையும் அமலில் வைத்திருந்த்து. தூத்துக்குடியில் நடந்த படுகொலையை கண்டித்து பலரும் தமிழகம் முழுக்க போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அர்சு தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இணைய சேவையை முடக்கியது. மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுகிறது என்கிற முடிவை அறிவித்தது. இன்று அனைத்துக்கட்சிகளின் சார்பாக மறியல் போராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது.

ஸ்டெரலைட் ஆலை மூடப்பட்ட  நிலையில் தற்போது தூத்துக்குடியில் இயல்பு நிலையை திரும்ப கொண்டுவர  அரசு பேருந்துகளை முழு அளவில் இயக்கிறது. மேலும் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கான பேருந்தும் இயக்க அரசு முன்னேற்பாடுகளை செய்யவுள்ளது.

ஒருபோதும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் தொடங்காது என அரசு  தெரிவித்துள்ளது. மேலும் படிப்படையாக காவல்துறையினர் எண்ணிக்கையும் குறைக்க அரசு முன்வந்துள்ளது. என ஆட்சியர் தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu Assembly Election Results 2026 Live.. தமிழக அரசியலில் கிங் மேக்கராகும் விஜய்..? தனிப்பெரும்பான்மைக்கு ஆப்பு..?
எடப்பாடியின் தூக்கத்தை கெடுத்த Exit POLL முடிவுகள்.! உண்மை நிலவரம் மாறும் என மார்த்தட்டும் தளபதி.! குத்தாட்டம் போடும் திமுக தொண்டர்கள்.!