உலக நாடுகளிலும் பரவிய தூத்துக்குடி படுகொலை... இங்கிலாந்த் ஊடகத்தில் “தி கார்டியன்-ல்” வெளியான செய்தி!

First Published May 25, 2018, 10:23 AM IST
Highlights
Police in south India accused of mass murder after shooting dead protesters


தூத்துக்குடி நடந்த கொடூரமான படுகொலைகள் விவகாரம் உலகம் முழுவதும் தீயாகப் பரவியதால் இங்கிலாந்தின் முன்னணி பத்திரிகையான தி கார்டியன் -ல் செய்தியாக வெளிவந்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் காப்பர் உற்பத்தி நிறுவனத்தினால் சுற்றுச்சூழல் மாசடைவதாலும், புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களின் தாக்கம் ஏற்படுவதாலும் தூத்துக்குடி மக்கள் அந்நிறுவனத்துக்கு எதிராகப் போராடிவருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் 10க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் போலீசாரால் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டதால் 13 பலியாகியுள்ளனர், மேலும் பலர் படுகாயங்களுடன் கவலைக்கிடமாக உள்ளனர்.

இந்நிலையில், #EncounterEdappadi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டாப் டிரென்டிங்கில் இருந்து வருகிறது. இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிராகவும், ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மக்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இதனையடுத்து, தூத்துக்குடியில் நடந்த இந்த கொடூரப் படுகொலை விவகாரம் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவையும் தாண்டி உலக நாடுகளிலும் பேசத் தொடங்கிவிட்டனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பத்திரிகையான தி கார்டியன் ஊடகத்திலும் தூத்துக்குடி போராட்டமும் அதில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு படுகொலைகளும் செய்தியாக வெளிவந்துள்ளது.

click me!