
ஸ்டெர்லைட் எதிர்ப்பு 100ஆவது நாள் போராட்டம் சாதாரணமாகத்தான் இன்று காலையில் தொடங்கியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நகர நகர, டென்ஷன் தொடங்கியது. ஊர்வலத்துக்குக் காவல் துறை தடைவிதித்தது. ஆனால், தடையை மீறி வந்தவர்களைத் தடுத்துப் பார்த்தார்கள். நிற்கவில்லை. கண்ணீர் புகை வீச்சு, துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை படு பயங்கரமாக வாயிலும், நெற்றியிலும், மார்பிலும் சுட்டு வீழ்த்தினர். பலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதனையடுத்து துப்பாக்கி சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து கட்சி தலைவர்களும் துத்துகுடிக்குச் சென்று துப்பாக்கிச் சூட்டில் காயமடந்தவர்களை நேரில் சென்று பார்த்துவந்தனர். இதனை அடுத்ததாக துப்பக்கிச்சுட்டை பற்றிய செய்தியை முடக்கும் நோக்கத்தில் இணைய சேவைகளும் நிறுத்தப் பட்டுள்ளன. அதனால் ட்விட்டர், முகநூல் என எதையும் பயன்படுத்த முடியாததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் பேருந்துகள், ஆட்டோக்கள் ஆகியவை இயங்காததால் தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் நெல்லை என மூன்று மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், #EncounterEdappadi என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டாப் டிரென்டிங்கில் இருந்து வருகிறது. இந்த ஹேஷ்டேகை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு எதிராகவும், ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் மக்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இந்த சமூக வலைதளங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒட்டுமொத்தமாக தங்களின் எதிர்ப்பையும் வீசி வருகின்றனர்.
ட்விட்டரில் வெளியான கருத்துக்கள்...
"ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்" என்று அறிவித்து 13 பேரின் திட்டமிட்ட கொடூரப் படுகொலையையும் சேர்த்து மூடப்பார்க்கிறார் என்கவுண்டர் எடப்பாடி. ஆலையை மூடினால் மட்டும் போதுமா? 13 பேரை படுகொலை செய்ததற்கு என்ன தண்டனை? மக்களால் முதல்வராகியிருந்தால் மக்கள் மீது கொஞ்சமாவது பயம் இருந்திருக்கும்
இந்த எடப்பாடிக்கு இன்னொரு பேரு இருக்கு, அது "என்கவுண்டர் எடப்பாடி" "Encounter Edapadi"
10 லட்சம் கொடுத்தால் தமிழகத்தில் யாரை வேண்டுமானாலும் என்கவுண்டர் செய்யலாம் எடப்பாடி அரசின் புது சட்டம் என இப்படியான கருத்துகள் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக பதிவாகி வருகின்றன.