வெளியூர் ரயிலை பிடிக்க இனி சென்ட்ரலுக்கு அரக்க பரக்க ஓட வேண்டாம்…. டிராபிக்ல மாட்டாம இன்னையிலிருந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் !!

First Published May 25, 2018, 10:41 AM IST
Highlights
chennai metro train service will be inagurated by eps and central minister


வெளியூர் ரயிலை பிடிக்க இனி சென்ட்ரலுக்கு அரக்க பரக்க ஓட வேண்டாம்…. டிராபிக்ல மாட்டாம இன்னையிலிருந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கலாம் !!

சென்னை சென்ட்ரல் – நேரு பூங்கா, சின்னமலை-டிஎம்எஸ் புதிய வழித்தடங்களில் இன்று முதல் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் 2 வழித்தடங்க ளில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு  23  ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 28 கி.மீ. தூரம் பணிகள் முடிந்து ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 



இரண்டாவது கட்டமாக நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் மற்றும் சின்னமலை – டிஎம்எஸ் வழித்தடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு  கடந்த 2 மாதங்களாக சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் - நேரு பூங்கா, சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில்சேவையை இன்று மதியம் 12.30 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி  மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி  ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.


சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த வழித்தடத்தில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். ஆகிய 4 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சின்னமலை - டி.எம்.எஸ். இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. 

இதன்மூலம் சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு பயணிகள் நேரடியாக சென்று வரலாம். அதேநேரத்தில் சைதாப்பேட்டை மார்கமாக செல்ல விரும்பும் பயணிகள், விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். பின்பு, டி.எம்.எஸ். மார்கமாக செல்லும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டும். 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் முதல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு 10 ரூபாயும், 2 முதல் 4 கி.மீ துழரத்துக்கு 20  ரூபாயும், 4 முதல் 6 கி.மீ. தூரத்துக்கு 30 ரூபாயும், 6 முதல் 10 கி.மீ தூரத்துக்கு .40 ரூபாயும் , 10 - 15 கி.மீ தூரத்துக்கு 50 ரூபாயும் 15 - 20 கி.மீ  தூரத்துக்கு  60 ரூபாயும் ,  20 - 50 கி.மீ  தூரத்துக்கு 70  ரூபாயும் ஏற்கெனவே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எனவே சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு கட்டணமாக.70 ரூபாய்  நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

click me!