தேர்தலில் அரசு ஊழியர்கள் ஆதரவு யாருக்கு தெரியுமா? குஷியில் அ.தி.மு.க.. ஷாக் தி.மு.க,!

Published : Feb 16, 2022, 06:30 PM IST
தேர்தலில் அரசு ஊழியர்கள் ஆதரவு யாருக்கு தெரியுமா? குஷியில் அ.தி.மு.க.. ஷாக் தி.மு.க,!

சுருக்கம்

ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்! என்பது எல்லா சீசனுக்குமான பஞ்ச் டயலாக். ஆனால் ‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம் மச்சான்’ என்பது தேர்தல் நேரத்துக்கான மிக அவசியமான டயலாக்!

ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை மச்சான்! என்பது எல்லா சீசனுக்குமான பஞ்ச் டயலாக். ஆனால் ‘ஒவ்வொரு வாக்கும் முக்கியம் மச்சான்’ என்பது தேர்தல் நேரத்துக்கான மிக அவசியமான டயலாக். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களத்தில் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் அத்தனை கட்சிகளுமே சார் உங்க ஓட்டு எங்களுக்கு! ஆயா உங்க ஓட்டு எங்களுக்கு! அம்மணி உங்க ஓட்டு எங்களுக்கே! என்று தேடித்தேடி வேட்டையாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரேயொரு பாயிண்ட் இதில் என்னவென்றால்….காலில் விழுந்து இந்த ஓட்டு வேட்டையின் நிகழ்த்துகிறார்கள்.

ஒத்த செத்தயா இருக்கும் ஓட்டே முக்கியம் எனும் போது, மிகப்பெரிய வாக்கு வங்கியின்  ஆதரவு யாருக்கு? என்பது மிக மிக முக்கியமான கேள்வியல்லவா. அந்த வகையில், பல்லாயிரம் பேர் இருக்கும் அரசு ஊழியர்களின் வாக்கு வங்கி யாரை ஆதரிக்கிறது? எனும் கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கான சர்வே நடத்தப்பட்டு,  கருத்துக்களும், முடிவுகளும் வெளியாகியுள்ளன.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் எப்போதும் தி.மு.க.வின் ஆதரவாளர்களே. அதிலும் அக்கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும் இந்த சூழலில் அவர்களின் வாக்கு வங்கி நிச்சயம் ஸ்டாலின் இயக்கத்தை தானே ஆதரிக்கும்! இதிலென்ன டவுட்டு வேண்டியிருக்கிறது? எனும் எண்ணத்துடன் அந்த ரிசல்டை கவனித்தால் நெருடல் ஏற்படுகிறது.

ஜாக்டோ ஜியோ அமைப்பின் தலைவரான தியாகராஜன் கூறியிருப்பதாவது “தமிழக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் இப்போது சோர்வாக உள்ளனர் என்பது நிஜம். காரணம் பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு குழப்பங்கள். இதனால் எங்கள் மனம் உற்சாகமானதாக இல்லை. இத்துறையின் நிர்வாக விஷயத்தில் அரசு உருவாக்கியிருக்கும் மாற்றங்களால், சில முடிவுகளால் எங்களது உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் கூட தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடும் எண்ணம் எங்களுக்கில்லை. எங்கள் சங்கத்தினர் அவரவர்களுக்கு பிடித்த கட்சிக்கு வாக்களிப்பார்கள்.” என்று பொத்தாம் பொதுவாக பேசியுள்ளார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவரான தமிழ்ச்செல்வி “தற்போதைய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய பென்ஷன் திட்டத்தை ஒழித்து, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம்! நிலுவையில் உள்ள அரியர்ஸ் மற்றும் சரண்டர் போன்றவற்றை நிறைவேற்றுவோம்.’ என உறுதியளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து இத்தனை மாதங்களாகியும் பல வாக்குறுதிகள் இன்னும்  நிறைவேற்றப்படவில்லையே!” என்கிறார்.

இந்த கருத்துக்களை வைத்து, ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் தி.மு.கவுக்கு எதிரான மன நிலையில் இருக்கிறார்கள்! என்று அ.தி.மு.க. கிளப்பிவிட துவங்கியுள்ளது.

ஆனால் இதற்கு பதிலடி தரும் தி.மு.க.வின் செய்தி தொடர்பாளரான கண்ணதாசனோ “கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தை கொரோனா பெருந்தொற்று ஆட்டி படைத்ததை எல்லோரும் அறிவார்கள். இது போக புயல் மழை வெள்ளம் உள்ளிட்ட பல விஷயங்களில் மக்கள் நலனுக்காக அரசு மிக அதிகமாக நிதியை செலவலித்துள்ளது. தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு இன்னமும் வழங்கவில்லை. அதனால்தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற இயலவில்லை. ஆனால் முதல்வர் நிச்சயம் அந்த வாக்குறுதிகளை விடவும் அதிகமான நன்மைகளை அவர்களுக்கு செய்வார். கூடிய விரைவில் நல்ல சேதி வரும்.” என்கிறார்.

ஓ.கே!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!