தஞ்சாவூர் வருகிறார்கள் CBI அதிகாரிகள்.. ரவுண்டு கட்டும் பாஜக.. திகில் கிளப்பும் டெல்லி ராஜகோபாலன்.

Published : Feb 16, 2022, 05:39 PM IST
தஞ்சாவூர் வருகிறார்கள் CBI அதிகாரிகள்..  ரவுண்டு கட்டும் பாஜக..  திகில் கிளப்பும் டெல்லி ராஜகோபாலன்.

சுருக்கம்

வரும் வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் சிபிஐ எஸ்பி மற்றும் டிஎஸ்பி தரத்திலான அதிகாரிகள் லாவண்யா வழக்கை விசாரிக்க தஞ்சாவூருக்கு வர வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். 

இன்னும் ஒருசில தினங்களில் மாணவி தற்கொலை வழக்கை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் தமிழகம் வர உள்ளனர் என டெல்லி மூத்த பத்திரிகையாளர் ராஜகோபாலன் தெரிவித்துள்ளார். இது தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் பின்னடைவாக இருக்கும் என்றும், அண்ணாமலைக்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார். திருக்காட்டுப் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மதமாற்றம் முயற்சி இல்லை என தமிழக காவல்துறை கூறி வந்த நிலையில்  ராஜகோபால் இவ்வாறு கூறியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேசிய அளவில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதாவது பள்ளி மற்றும் விடுதி நிர்வாகம் கட்டாய மத மாற்றத்திற்கு வலியுறுத்தியதால் தான் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டியதே அதற்கு காரணம். மேலும் அந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது பேசியதாக வீடியோ ஒன்றையும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பின்னர் அந்த வீடியோ தேசிய அளவில் வைரலானது, அதேநேரத்தில் மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும், தமிழகத்தில் மதமாற்ற தடைச்சட்டம் உடனே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து பாஜகவினர் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து மாணவி பேசிய உண்மை வீடியோ என மேலும் ஒரு புதிய வீடியோ வெளியானது. அதில் மாணவி தன்னை மதமாற்றம் செய்ய யாரும் நிர்பந்திக்க வில்லை என கூறியிருந்தார். விடுதி நிர்வாகம் மற்றும் பள்ளி நிர்வாகம் தன் இந்து மத அடையாளங்களையும், செந்தூர் போட்டு வைக்கக்கூடாது என்று ஒருபோதும் தடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். அதன்மூலம் மாணவி மதமாற்றம் செய்ய நிர்பந்திக்கப்படவில்லை என்பது உறுதியானது. இந்த விவகாரத்தில் மாறிமாறி வீடியோ வெளியாகி குழப்பம்  ஏற்பட்ட நிலையில்தான், உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரிக்க பாஜக தேசிய தலைவர்  ஜே.பி நட்டா தலைமையில் குழு ஒன்று தமிழகம் அனுப்பப்பட்டது. 

அந்த குழு உயிரிழந்த மாணவியின் பெற்றோர்களை சந்தித்து விசாரணை நடத்தி அதற்கான அறிக்கையை ஜே.பி நட்டாவிடம் வழங்கியுள்ளது. மேலும் இது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு தடைகேட்டு தமிழக அரசு தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மனு செய்திருந்த நிலையில், உச்ச நீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு மதுரை நீதி மன்றம் இட்ட உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என மறுத்து விட்டது. இதனால் தற்போது இந்த விவகாரம் அதி முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இது குறித்து பலரும் பல வகையில் கருத்து கூறி வருகின்றனர்.  இது தொடர்பாக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள டெல்லி மூத்த பத்திரிக்கையாளர் ராஜகோபாலன், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தடை விதிக்க முடியாது என  உச்ச நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துவிட்டு நிலையில் வரும் வெள்ளி அல்லது சனிக்கிழமைகளில் சிபிஐ எஸ்பி மற்றும் டிஎஸ்பி தரத்திலான அதிகாரிகள் லாவண்யா வழக்கை விசாரிக்க தஞ்சாவூருக்கு வர வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். நீதி மன்றத்தில் இருந்து வழக்கு விசாரணைக்கு தடையில்லை என சிபிஐ இயக்குனராக உள்ள சுபோத் குமார் ஜெய்ஸ்வால்க்கு முறையாக கடிதம் அனுப்பப்படும் என்றும், 

பின்னர் இந்த வழக்கு தொடர்பாக மத்திய அமைச்சகத்திற்கு அவர் கடிதம் அனுப்புவார் என்றும், அது பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூறியுள்ளார். மொத்தத்தில் லாவண்யா வழக்கு பிரதமர்  வரை சென்றுள்ளது, பின்னர் முறையான ஒப்புதல்கள் கிடைத்த பின்னர் நிச்சயம் ஒரு சில தினங்களில் சிபிஐ அதிகாரிகள் நேரடியாக தஞ்சாவூர் வந்து விசாரணையை துவங்குவர். சிபிஐ இந்த வழக்கில் இறங்கி உள்ளதால் அடுத்தடுத்து பரபரப்பு தகவல்கள் டெல்லியில் இருந்து வரக்கூடும். இவ்வாறு ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!