பொன்முடியை வர சொல்லுடா..! இது ஏவல்துறை..! வில்லங்க பேச்சு..வழக்கில் சிக்கிய அதிமுக சிவி சண்முகம்..

Published : Feb 16, 2022, 04:34 PM IST
பொன்முடியை வர சொல்லுடா..! இது ஏவல்துறை..! வில்லங்க பேச்சு..வழக்கில் சிக்கிய அதிமுக சிவி சண்முகம்..

சுருக்கம்

நகர்புற உள்ளாட்சி தேர்தல் பொதுக்கூட்டத்தில் அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரிரு நாட்களே உள்ளதால் பிரதான கட்சிகள் வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விழுப்புரம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். 

அப்போது, "திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் வாக்குறுதிகளை திமுக மறந்துவிட்டது. என்ன வாக்குறுதி கொடுத்தோம் என்பதை ஸ்டாலின் மறந்துவிட்டார். பொங்கல் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடு நிர்வாக சீர்கேட்டை வெளிக்காட்டி உள்ளது. பழனிசாமியும், நானும் தமிழகத்தின் பூர்வீக குடிகள். உண்மையான தமிழர்கள், ஸ்டாலினை போல் வந்தேரிகள் அல்ல. பிழைப்புக்காக தமிழ்பேசும் போலி தமிழர்கள் அல்ல. திமுக தேவைப்பட்டால் மாநில சுயாட்சி குறித்து பேசும், இல்லை என்றால் மாநில சுயாட்சியை காலில் போட்டு மிதிக்கும்.

நீட் தேர்வை வைத்து மாணவர்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு, வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் வரை ஆளுநர், மத்திய அரசு என பேசுவார்கள். தேர்தல் ஜனநாயக முறையில் நடத்தப்பட வேண்டும். இன்றைக்கு சென்னையில் உள்ள ரவுடிகள் தமிழகம் முழுவதும் பரவி உள்ளாட்சி தேர்தலில் பரவி வேலை செய்கிறார்கள். நான் கடந்த காலங்களில் மரணத்தை கண் முன்னால் பார்த்தவன், எங்களை அச்சுறுத்த நினைக்க வேண்டாம். தேர்தல் ஆணையம் முழுக்க முழுக்க திமுகவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று தெரிவித்தார். 

இந்நிலையில் பொதுகூட்டத்தில் சிவி.சண்முகம் பேசிக்கொண்டிருந்த போது அங்கிருந்த ஒருவர் பேச்சை நிறுத்துமாறு கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிவி.சண்முகம், இந்த மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன் எனக்கூறினார். பொன்முடியை வர சொல்லுடா, உன்னை போல் ஆயிரம் பேரை பார்த்து விட்டேன் என தெரிவித்தார். காவல் துறையினரை எச்சரிக்கிறேன் என்னை மிரட்ட நினைக்க வேண்டாம். இரவு 12 மணி வரை இங்கேயே இருக்கிறேன் தைரியம் இருந்தால் திமுகவினர் நேரில் வாங்கடா என சவால் விடுத்து பேசினார். காவல்துறை இல்லை இது ஏவல்துறை என்று காட்டமாக விமர்சித்தார்.

இந்நிலையில் விழுப்புரம் மேற்கு காவல்நிலையத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
நான் கூட்டணியில் இருந்து வெளியேற அண்ணாமலை தான் காரணம்..? டிடிவி தினகரன் பரபரப்பு விளக்கம்