இதுல எது உண்மை? அமைச்சர் சொன்னதா? அதிகாரி சொன்னதா? தமிழக அரசை விளாசும் டிடிவி.தினகரன்.!

By vinoth kumarFirst Published May 11, 2022, 9:33 AM IST
Highlights

இதோ... இன்னொரு வெற்று அறிவிப்பாக '5 வயதிற்குட்பட்டவர்கள் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம்' என்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிக்கிறார். 

வெறும் கவர்ச்சி அறிவிப்புகளைக் கொடுத்தே மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திவிடலாம் என்று தி.மு.க நினைக்கிறது என டிடிவி.தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- வெறும் கவர்ச்சி அறிவிப்புகளைக் கொடுத்தே மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்திவிடலாம் என்று தி.மு.க நினைக்கிறது போலும்!

இதோ... இன்னொரு வெற்று அறிவிப்பாக '5 வயதிற்குட்பட்டவர்கள் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் இலவசமாக பயணிக்கலாம்' என்று சட்டப்பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிக்கிறார். 

ஆனால், உட்கார்ந்து கொண்டு வரவேண்டுமானால் 5 வயதிற்குட்பட்டவர்கள் பயணச்சீட்டு வாங்க வேண்டுமென அவரது துறை அறிக்கை விடுகிறது. இதில் எது உண்மை? பயணம் இலவசம் என்றால் சிறுவர், சிறுமியர் நின்றுகொண்டு வரவேண்டும் அல்லது பெற்றோர் மடியில்  அமர வேண்டுமா?  அப்படியெனில் எதற்காக இத்தகைய அறிவிப்பை அமைச்சர் கொடுக்க வேண்டும்? இதையெல்லாம் பார்க்கும்போது, “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! தமிழ்நாட்டிலே...” என்ற புரட்சித்தலைவர் படப் பாடல்தான் நினைவுக்கு வருகிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

click me!