கதிராமங்கலம் தொடர்பாக அரசு தீர்மானம் நிறைவெற்றுமா? – சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி…

 
Published : Jul 11, 2017, 12:16 PM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
கதிராமங்கலம் தொடர்பாக அரசு தீர்மானம் நிறைவெற்றுமா? – சட்டசபையில் ஸ்டாலின் கேள்வி…

சுருக்கம்

Whether the government resolution is complete issue of Kathiramangalam by stalin

கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபடுபட்டு கைதானவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் எனவும், கதிராமங்கலம் தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி அமைத்த குழாயில் இருந்து திடீரென கச்சா எண்ணெய் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமைடைந்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராகவும் எண்ணெய் குழாயை அகற்ற கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் மீது தடியடி நடத்தி 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த 11 நாட்களாக கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவையில் கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபடுபட்டு கைதானவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் எனவும், கதிராமங்கலம் தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மேலும், கதிராமங்கலத்தில் அமைதியை நிலைநாட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தெரிவித்தார்.  

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!