என் தம்பியும், என் கணவருமே நமக்கு எதிரிகளா?... - சிறையில் கலங்கிய சசிகலா!

 
Published : Jul 11, 2017, 11:12 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
என் தம்பியும், என் கணவருமே நமக்கு எதிரிகளா?... - சிறையில் கலங்கிய சசிகலா!

சுருக்கம்

natarajan and dhivakaran action against dinakaran sasikala

தினகரனுக்கு எதிராக எடப்பாடி மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும், தமது குடும்பத்தின் மீது தொடுக்கப்படும் தாக்குதல் என்றே கருதுகிறார் சசிகலா. சிறையில் இருப்பதால், கட்சி மற்றும் ஆட்சியில் எதையும் செய்ய முடியாமல் போனதால், இன்று மூன்று அணிகளாக கிடக்கிறது அதிமுக.

ஜெயலலிதா இருந்த வரை, ராணுவத்திற்கு நிகராக கட்டுப்பாட்டுடன் திகழ்ந்த அதிமுக, இன்று துண்டு துண்டாக சிதறி கிடப்பது சசிகலாவை அதிகம் கவலை அடைய செய்துள்ளது. ஜெயலலிதா இறந்த சில நாட்களில், தஞ்சையில் நடந்த விழாவில் தமது கணவர் நடராஜனும், தம்பி தினகரனும் பேசிய பேச்சுதான், தொண்டர்கள் மத்தியில் தம் மீதான வெறுப்பை அதிகரிக்க வைத்து விட்டது என்றும் அவர் நினைக்கிறார்.

இந்நிலையில், சசிகலாவை பெங்களூரு சிறையில் தினகரனுடன் சந்தித்த எம்.எல்.ஏ க்கள், நடராஜனும், திவாகரனும் பன்னீருடன் தொடர்பு வைத்து கொண்டு, நமக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என்று வெளிப்படையாகவே குற்றம் சொல்லி இருக்கின்றனர். ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை குறித்து, தேவை இல்லாமல் நடராசன் பேட்டி கொடுத்து வருவது, நமக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர்கள் கூறி இருக்கின்றனர்.

அதை கேட்டு பொறுமை இழந்த சசிகலா, நான் சொல்வதை யாரும் கேட்காததால் வந்த வினைதான், இன்று கட்சி இந்த நிலைக்கு ஆளாகி இருக்கிறது. நம் உறவுகளே நமக்கு எதிராக செயல்படும்போது, மற்றவர்களை குற்றம் சொல்வது எப்படி சரியாகும் என்று உடைந்த குரலில் கூறி இருக்கிறார். சீராய்வு மனு விசாரணைக்கு வந்து, கொஞ்ச நாட்கள் அவகாசம் கிடைத்தால் கூட, வெளியில் வந்து கட்சி, ஆட்சி ஆகிய இரண்டையும் சரி செய்து விடலாம் என்று நினைக்கிறேன். ஆனால், அதுவும் நடக்கவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார்.

பின்னர், சீராய்வு மனு எப்போது விசாரணைக்கு வருகிறது என்று தினகரனிடம் அவர் கேட்க, அது ஆகஸ்ட் மாதம்தான் விசாரணைக்கு வருகிறதாம் என்று அவர் கூறி இருக்கிறார். சரி, அதுவரை எந்த அவசரமும் வேண்டாம். பொறுமையாக இரு என்று தினகரனிடம், சசிகலா கூறி இருக்கிறார். இந்த மாதம் 7 ம் தேதியே விசாரணைக்கு வரவேண்டிய சீராய்வு மனு, அடுத்த மாதத்திற்கு தள்ளிப்போனதில் அவர் மிகவும் அப்செட் ஆகி உள்ளார்.

குடியரசு தலைவர் தேர்தலும் முடிந்து விட்டால், பாஜகவுக்கு நமது தயவு எந்த விதத்திலும் தேவை இல்லை. அதனால், அவர்கள் எந்த முடிவை வேண்டுமானாலும் எடுக்கலாம். அது நமக்கு சாதகமாகவும் இருக்கலாம், பாதகமாகவும் இருக்கலாம். எனவே, அதுவரை பொறுமை அவசியம் என்று, மீண்டும் ஒரு முறை தினகரனை பார்த்து சசிகலா கூறி இருக்கிறார். எனவே, சீராய்வு மனுவின் முடிவை பொறுத்தே சசிகலா தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்பதே இப்போதைய தகவல்.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!