போற போக்கைப்பார்த்தா இப்போதைக்கு நடக்காது போல... அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன தகவல்..!

By Thiraviaraj RMFirst Published Jul 30, 2021, 5:19 PM IST
Highlights

எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அரசும் பள்ளிகள் திறப்பது குறித்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறது. 

கொரோனா பரவலால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் திறக்கபடாமல் உள்ளன. இந்நிலையில் அடுத்து எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன. அரசும் பள்ளிகள் திறப்பது குறித்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறது. 
 
இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், கள்ளப்பெரம்பூர் பகுதியில் உள்ள செங்கழுநீர் ஏரியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ’’பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வரை திறப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. கொரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வந்தாலும், அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும் எனத் தெரியவில்லை.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும்போது எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதோ, அதே அளவுக்குப் பள்ளிகள் திறப்புக்கும் முக்கியத்துவம் அளிப்பதும் காட்டாயம். எனவே தமிழ்நாடு முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ, அதனடிப்படையில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

பள்ளிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஆலோசனை செய்யப்படுகிறது. அதற்கு முன்பாக பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணி நிரவல் செய்யப்பட்ட பிறகுதான் எங்கெங்கு காலிப் பணியிடங்கள் உள்ளன என்பது குறித்த விவரம் தெரியவரும்” என தெரிவித்துள்ளார்.

click me!