அந்த பெரியார் சிலையை பார்க்கும் போது பெருமாளை வழிபடுவது போன்று எனக்கு தோன்றும்.. டிடிவி.தினகரன் அதகளம்.!

Published : Aug 06, 2022, 06:37 AM ISTUpdated : Aug 06, 2022, 06:38 AM IST
அந்த பெரியார் சிலையை பார்க்கும் போது பெருமாளை வழிபடுவது போன்று எனக்கு தோன்றும்.. டிடிவி.தினகரன் அதகளம்.!

சுருக்கம்

நான் கடவுளுக்கு எதிரி அல்ல. கடவுள் பெயரைக் கூறி ஏமாற்றுபவர்களுக்கே எதிரி என்று பெரியார் கூறினார். அவரின் கடவுள் மறுப்பு கொள்கை தவிர மற்ற அனைத்துக் கொள்கைகளிலும் உடன்பாடு உள்ளது. 

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போன்று செயல்படுகிறார் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

அமமுகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் வரும் 15-ம் தேதி சென்னை ஶ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.  இது தொடர்பாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் டிடிவி. தினகரன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிடிவி.தினகரன்;- ஜிஎஸ்டி வரி விதிப்பு பொதுமக்களை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களின் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகள் இணைந்து பெட்ரோல், டீசல் விலை குறைப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையும் படிங்க;- சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன்… 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!!

நான் கடவுளுக்கு எதிரி அல்ல. கடவுள் பெயரைக் கூறி ஏமாற்றுபவர்களுக்கே எதிரி என்று பெரியார் கூறினார். அவரின் கடவுள் மறுப்பு கொள்கை தவிர மற்ற அனைத்துக் கொள்கைகளிலும் உடன்பாடு உள்ளது. ஶ்ரீரங்கம் கோயில் முன்பு உள்ள பெரியார் சிலையை பார்க்கும்போது அந்த சிலை மனதிற்குள் பெருமாளை வழிபடுவது போன்றே எனக்கு தோன்றும். 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, சிறந்த எழுத்தாளர். அவருக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பது தவறு இல்லை. ஆனால், அப்படி ஒரு பேனா நினைவுச் சின்னத்தை அமைக்கும் போது அதை திமுக கட்சி செலவில் அமைக்கலாம். அரசு செலவில் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க தேவை இல்லை.

இதையும் படிங்க;-  சொகுசு காரை வாங்கி சர்ச்சையில் சிக்கிய நேரு! விலை இத்தனை கோடியா? இந்த காரை யாரெல்லாம் வச்சிருக்காங்க தெரியுமா?

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போன்று செயல்படுகிறார். இனத்தை வைத்து சிங்களர்களையும் தமிழர்களையும் பிரித்து அரக்கர்கள் போல இருந்ததால்தான், இலங்கையிலிருந்து ராஜபக்சே குடும்பத்தினர் விரட்டப்படுகின்றனர். அதேபோல எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது இயக்கத்தை எடப்பாடி பழனிசாமி சாதியை வைத்து பிரிவினை செய்வதால், இவரும் ராஜபக்சே போல அந்த தொண்டர்களால் விரட்டப்படுவார் என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இப்படியொரு ப்ளானா..? விஜயின் டபுள் ஸ்டாண்ட் ..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!
திருமா தில்லுமுல்லு நாடகம்போடுகிறார்..! பட்டியல் சமூக மக்களுக்காக போராடுவது பாமகதான்..! வழக்கறிஞர் பாலு பளீர்..!