ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்கள் 8 பேரை மீட்க தூதரக ரீதியில் நடவடிக்கை தேவை என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
குமரி மீனவர்கள் 8 பேரை மீட்க தூதரக ரீதியில் நடவடிக்கை தேவை என ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுக்குறித்த அவரது கடிதத்தில், ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.
இதையும் படிங்க: அதிமுக வழக்கில் அதிரடி திருப்பம்.. இனிமே இவர்தான் எல்லாம் - இபிஎஸ் Vs ஓபிஎஸ் !
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடித் தொழிலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானதாலும், ஓமன் நாட்டவரால் அவர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததாலும் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க திமுக அரசு காத்திருக்கிறது ? சீமான் ஆவேசம் !
அவ்வாறு சிக்கித் தவிக்கும் மீனவர்களை மஸ்கட்டிலிருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.