பால்குடித்து பழக்கப்பட்டவர் பால் நினைப்பாகவே இருக்கிறார்… ஜெயக்குமாரை கிண்டலடித்த நாசர்!!

Published : Aug 05, 2022, 08:44 PM IST
பால்குடித்து பழக்கப்பட்டவர் பால் நினைப்பாகவே இருக்கிறார்… ஜெயக்குமாரை கிண்டலடித்த நாசர்!!

சுருக்கம்

பால் நினைப்பாகவே இருந்துக் கொண்டு மற்றவர்களையும் அவரைப் போலவே நினைத்துகொண்டு பேசுவதாக பால்வளதுறை அமைச்சர் நாசர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார். 

பால் நினைப்பாகவே இருந்துக் கொண்டு மற்றவர்களையும் அவரைப் போலவே நினைத்துகொண்டு பேசுவதாக பால்வளதுறை அமைச்சர் நாசர் ஜெயக்குமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக பால்வளதுறை அமைச்சர் நாசர் பால் குடிக்கும் பூனை என அண்மையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இந்த நிலையில் இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பால்வளதுறை அமைச்சர் நாசர், ஜெயக்குமார் பால்குடித்து பால்குடித்து பழக்கப்பட்ட அவர் எப்பொதும் பால் நினைப்பாகவே இருக்கிறார். அதனால்  மற்றவர்களையும் அவரைப் போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார். தவறான கருத்துக்களை கூறி தன்னை முன்நிலைபடுத்தி கொள்ள வேண்டும் என்று ஒரு சில அரசியல் தலைவர்கள் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க திமுக அரசு காத்திருக்கிறது ? சீமான் ஆவேசம் !

ஆவின் பால் 430 ml  உள்ளதாக கூறுகின்றனர். அதன் உண்மையான அளவு 500ml கிடையாது 517 கிராம் எடையுடன் வினியோகம் செய்யப்படுகிறது. பால் வெளியே வருவதற்கு முன் உணவு பாதுகாப்பு துறை, தர கட்டுப்பாட்டு பரிசோதனை மற்றும் ஆவின் தொழிற்சாலை பொறியாளர்கள் என மூன்று விதமான ஆய்வுகள் முடிந்துதான் வினியோகத்திற்கு வருகிறது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தொடர் ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்ட பிறகு ஒரு கோடி சந்தாதாரர்களை சென்றடைகிறது. ஆவின் நிர்வாகத்தில் நாளொன்றுக்கு 65 லட்சம் பாக்கெட் களை நாள் ஒன்றுக்கு பேக்கிங் செய்து அனுப்பப்படுகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை திடீரென சந்தித்த மம்தா.. டெல்லியில் பரபரப்பு !

ஆவினில் தயாரிக்காத சத்து மாவு ஊழல் நடந்ததாக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை அண்ணாமலை முன் வைத்தார். அண்ணாமலை நாளொரு வண்ணம் பொழுதுறு மேனியுமாக பொய் கூறுவதையே தொழிலாக வைத்துள்ளனர். பால் ஏற்றி வரும் வாகனங்களை சுத்தம் செய்ய RO வாட்டர் பயன்படுத்தப்படுகிறது. அதுபோன்ற 25 RO பிளான்ட்டுகள் நாளொன்றுக்கு 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்து வருகிறது. அந்த RO தொழிற்சாலையில் விரைவில் தயாரிக்கவுள்ள ஆவின் குடிநீர் அனைத்து பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஆவின் மையம் மூலம் விரைவில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!
India Independence: இந்திய சுதந்திரம் உலக விடுதலைக்கு வித்திட்ட கதை! இதன் பிறகு எத்தனை நாடுகள் சுதந்திரம் பெற்றன தெரியுமா?