எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த புது ஸ்கெட்ச்… ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைக்கு ஓபிஎஸ்!!

By Narendran SFirst Published Aug 5, 2022, 8:00 PM IST
Highlights

அதிமுகவில் பதவி இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியாளர்களை அணி திரட்டி அவர்களுக்கு பதவி வழங்கி  எடப்பாடிக்கு எதிராக களமாட வைத்து தன்னுடைய மெஜாரிட்டியை நிரூபிக்க திட்டம் தீட்டியிருக்கிறார் ஓபிஎஸ்.

அதிமுகவில் பதவி இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியாளர்களை அணி திரட்டி அவர்களுக்கு பதவி வழங்கி  எடப்பாடிக்கு எதிராக களமாட வைத்து தன்னுடைய மெஜாரிட்டியை நிரூபிக்க திட்டம் தீட்டியிருக்கிறார் ஓபிஎஸ். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமானது முதல் ஓபிஎஸ்-க்கும் இபிஎஸ்-க்கும் மோதல் போக்கு நிலவி வருகிறது. எடப்பாடிக்கே அதிக ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் எடப்பாடி பழனிசாமி அளவிற்கு ஓபிஎஸ்-க்கு எதிலும் ஒரு உறுதிப்பாடு, ஒரு விஷயத்தில் நிலையான முடிவு எடுப்பதில்லை என விமர்சனங்களும் உள்ளது. இந்த பிரச்சனைக்களுக்கு இடையே சட்டசபையில் கருணாநிதியை அடிக்கடி பாராட்டி வந்தது, எடப்பாடி தரப்பை மேலும் கடுப்பாக்கியதுடன், ஓபிஎஸ் மகன் மு.க.ஸ்டாலினை தனிமையில் சந்தித்து பாராட்டியதுடன், வாழ்த்து சொல்லி, பரிசும் தந்தது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆயிற்று. இந்த சம்பவங்கள் தான் பெரும்பாலான அதிமுகவினர் ஓபிஎஸ் பக்கம் இல்லாததற்கு காரணம் என கூட சொல்லலாம். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் ஸ்டாலினை சந்தித்ததை வைத்தே, எடப்பாடியின் ஒற்றை தலைமை அரசியலும் ஆரம்பமானது என கூறப்படுகிறது. இதற்கு ஓபிஎஸ் தரப்பிலும் சில கேள்விகளை முன்வைத்தனர்.

இதையும் படிங்க: கடுப்பான நீதிமன்றம்.ஓபிஎஸ் தரப்பை அலறவிட்ட நீதிபதி - ஒருவழியாக மன்னிப்பு கேட்ட ஓபிஎஸ் தரப்பு !

ஒற்றை தலைமை பிரச்சனை வந்துவிட்டதாலேயே, முதல்வரை ரவீந்திரநாத் சந்தித்தாரா? அல்லது ரவீந்திரநாத் முதல்வரை சந்தித்ததால், ஒற்றை தலைமை விவகாரம் தலைதூக்கியதா? ஒரு எம்பி முதல்வரை நேரில் சந்தித்தார் என்பதைதவிர, வேறு என்ன இதில் காரணம் உள்ளது? ரவீந்திரநாத் மட்டும்தான் முதல்வரை பாராட்டினாரா? ஏன் சட்டசபையில் செங்கோட்டையன் பாராட்டவில்லையா? செல்லூர் ராஜு பாராட்டவில்லையா? அவ்வளவு ஏன்? எடப்பாடியின் ஆதரவாளரான, ராஜேந்திரபாலாஜி பாராட்டவில்லையா? இவர்கள் மட்டும் தமிழக அரசையும், முதல்வரையும் புகழலாம்.. ஒரு எம்பி, தமிழக அரசை பாராட்டக்கூடாதா? அங்கே அண்ணாமலை, திமுக ஊழல் பற்றி லிஸ்ட் வெளியிட்டு புட்டு புட்டு வைத்தாரே.. திமுக அரசின் சுகாதாரத்துறை மீதும், பத்திரப்பதிவு துறை மீதும் தானே புகார்களை சொன்னார்? இதற்கு எடப்பாடி தரப்பில் வந்ததா? விஜயபாஸ்கர், கேசி வீரமணியாவது, வாயை திறந்தார்களா? கமுக்கமாக இருக்க என்ன காரணம்? நாங்கள் கேட்க நினைத்தால் எவ்வளவோ கேட்கலாம் என்று அடுக்கடுக்காக அடுக்கினர். இதையெல்லாம் கொஞ்சம்கூட கண்டுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கியது போல் ரவீந்தரநாத்தையும் கட்சியில் இருந்து நீக்கம் செய்தார்.

இதையும் படிங்க: “ஆப்ரேஷன் தாமரை 2.0 - தமிழகம் வருகிறார் அமித்ஷா.." அலெர்ட் ஆன திமுக !

மேலும், ரவீந்திரநாத்தை, அதிமுக உறுப்பினராகவே கருதக்கூடாது என்று கூறி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் ஒன்றை எழுதினார். ஆனால் இதில் எடப்பாடிக்கு சரக்கலே ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை ஏற்கக் கூடாது என்று ஓபிஎஸ்ஸும் பின்னாடியே பதில் எழுதி கடிதம் எழுதினார். இந்த கடிதம் குறித்த முடிவு வெளிவராமல் இருந்த நிலையில் டெல்லியில் நடந்து வரும் மழைக்காலக் கூட்டத்தொடரில் ஓபி ரவீந்திரநாத் கலந்து கொண்டு பேடும் போது நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான சன்சத டிவியில் அதிமுக எம்பி என்றே பெயரிடப்பட்டது. இதன் மூலம் எடப்பாடி எழுதிய கடிதம் கண்டுகொள்ளாமல் விடப்பட்டதுடன், அதிமுக எம்பியாகவே ஓபிஆர் தொடர்கிறார் என்பதும் உறுதியாகி உள்ளது. இதனிடையே ராஜன் செல்லப்பா ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், தேனி எம்பி ரவீந்திரநாத், தான் ஒரு அதிமுக எம்பி என்று அவரே சொல்லிக் கொள்கிறார். ஆனால், நாடாளுமன்றத்தில் இருந்து இது தொடர்பாக எவ்வித பதிலும் வரவில்லை. அவர் சுயேச்சையான எம்பியாக இருக்கலாம்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை திடீரென சந்தித்த மம்தா.. டெல்லியில் பரபரப்பு !

அதிமுக எம்பியாக இருந்த சமயத்திலேயே அவர் சுயேச்சை எம்பி போலத்தான் செயல்பட்டார். என்றைக்கும் அவர் அதிமுக கொள்கைகளுக்காகக் குரல் கொடுத்ததே இல்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வீசியிருநத் நிலையில், அதற்கும் தற்போது பதில் கிடைத்துவிட்டதாகவே தெரிகிறது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் டெல்லி சப்போர்ட்டை வைத்து எடப்பாடி டீமில் உள்ள முக்கிய நபர்களை தன் பக்கம் இழுக்கும் வேலையில் இறங்கியுள்ளார் ஓபிஎஸ். பதவி இல்லாமல் இருக்கும் அதிமுகவினருக்கு பதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகளை நியமிக்க கட்சி தொண்டர்களை தேர்வு செய்யுமாறு, மாவட்ட செயலாளர்களுக்கு ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அதிமுகவில் பதவி இல்லாமல் ஒதுக்கப்பட்டவர்கள் மற்றும் அதிருப்தியாளர்கள் பதவி கிடைப்பதால் எடப்பாடிக்கு எதிராக களமாடுவார்கள் என்றும் தன்னுடைய மெஜாரிட்டியை நிரூபிக்க இது உதவும் என்றும் திட்டம் தீட்டியிருக்கிறார் ஓபிஎஸ். இந்த திட்டத்தை செயல்படுத்த அதிருப்தியாளர்களை கண்டுப்பிடித்து அவர்களை அணி திரட்டும் வேலையில் இறங்கி உள்ளார் ஓபிஎஸ்.

click me!