மத்திய நிதியமைச்சருடன் தமிழக நிதியமைச்சர் சந்திப்பு… ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் குறித்து ஆலோசனை!!

By Narendran SFirst Published Aug 5, 2022, 7:02 PM IST
Highlights

மதுரையில் இம்மாத இறுதியில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். 

மதுரையில் இம்மாத இறுதியில் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசினார். 48 ஆவது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் தமிழக நிதி அமைச்சரின் அழைப்பின் பேரில் மதுரையில் நடைபெறும் என கடந்த ஜூன் 29 ஆம் தேதி அன்று கூட்டத்தின் நிறைவு விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியை திடீரென சந்தித்த மம்தா.. டெல்லியில் பரபரப்பு !

மேலும் இந்த கூட்டதில் சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் விளையாட்டு மற்றும் குதிரை பந்தயம் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பு குறித்து முக்கியமாக விவாதிக்கபடும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் டெல்லியில்  தமிழக நிதி மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது மதுரையில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டத்தின் தேதி, முன்னேற்பாடு நடவடிக்கைகள், உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மோடிக்கு எமன் இதுதான்.. பாஜக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் பூர்வ குடிமக்களே கிடையாது.. அழகிரி பகீர்.

மேலும் அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு திரும்பப் பெற வேண்டும் எனவும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை விரைந்து வழங்க வேண்டும் எனவும் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது மத்திய நிதி துறை செயலர் சோமநாதன் மற்றும் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் முருகானந்தம் ஆகியோர் உடனிருந்தனர். தமிழகத்தில் முதல் முறையாக நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் குழு கூட்டத்தில் அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

click me!