தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முக்கிய தகவல்..!

By vinoth kumarFirst Published Jun 27, 2021, 12:24 PM IST
Highlights

பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிக்காட்டல் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களின் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மதிப்பெண்கள் பள்ளிக் கல்வித் துறையிடம் உள்ளது. எனவே, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எளிது. மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு வெளியிடப்படும்.

கொரோனா பரவல் தொடர்பான பெற்றோர்களின் அச்சம் குறைந்த பிறகுதான் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

திருச்சியில் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் பணியாற்றும் பூசாரிகள், அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நிவாரண உதவிகளை வழங்கினார். 

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- கொரோனா பரவல் குறைந்த பிறகு பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.  3-வது அலை வரும் என்று கூறப்படுகிறது. எனவே, ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல்கள், மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பெற்றோர்களின் கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில், முதலமைச்சர் ஸ்டாலின் ஒப்புதலோடு பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும் என்றார். 

கொரோனா பரவல் குறித்த அச்சம் பெற்றோர்களிடம் நீடிப்பதால் விரிவான ஆலோசனைக்கு பிறகே பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும். மேலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பான வழிக்காட்டல் வெளியிடப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களின் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு மதிப்பெண்கள் பள்ளிக் கல்வித் துறையிடம் உள்ளது. எனவே, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எளிது. மதிப்பெண்கள் வழங்கும் பணி விரைவில் முடிக்கப்பட்டு வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

click me!