வன்னியர் சங்க தலைவர் ம.க.ஸ்டாலினை கொல்ல ஸ்கெட்ச்.. பாமக முக்கிய நிர்வாகி கைது.. போலீசார் தீவிர விசாரணை.!

By vinoth kumarFirst Published Jun 27, 2021, 11:12 AM IST
Highlights

வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக பாமக  மாநில துணை பொதுச் செயலாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக பாமக  மாநில துணை பொதுச் செயலாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மருத்துவக்குடியைச் சேர்ந்தவர் ம.க.ஸ்டாலின். வன்னியர் சங்க மாநில துணைத் தலைவராக உள்ளார். இவரது தம்பி ம.க.ராஜா, சென்னையில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக கும்பகோணத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலினை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம கும்பல் கொலை செய்வதற்காக வந்தபோது அவர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

இந்த கொலைக்கு தலைவனாக செயல்பட்ட பிரபல ரவுடி லாலி மணிகண்டனை போலீசார் கடந்த 24ம் தேதி கைது செய்து போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர். விசாரணையில்  ம.க.ஸ்டாலினை கொல்ல சதித் திட்டம் தீட்டியதில் பாமக மாநில துணை பொதுச் செயலாளராக உள்ள கும்பகோணம் அருகே கொத்தங்குடியைச் சேர்ந்த கே.ஆர்.வெங்கட்ராமனுக்கு(42) தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை நேற்று போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

click me!