நாதியற்று இறந்த ஜெயலலிதா... சின்னாபின்னமான சசிகலாவின் குடும்பம்... ஒரு எச்சரிக்கை பதிவு!?

 
Published : Jan 26, 2018, 07:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
நாதியற்று இறந்த ஜெயலலிதா...  சின்னாபின்னமான சசிகலாவின் குடும்பம்... ஒரு எச்சரிக்கை பதிவு!?

சுருக்கம்

whats app status viral about Vijayendra

நாதியற்று இறந்த ஜெயலலிதாவின் அவல நிலையை உலகமே பார்த்தது, சசிகலாவின் குடும்பமே சின்னாபின்னமாகி விட்டது விஜயேந்திரர் பற்றி பேசுபவர்கள் பார்த்து பேசுங்கள் என மிரட்டல் பதிவு வாட்ஸ் ஆப்பிள் பதிவு உலா வருகிறது.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த  தமிழ்-சமஸ்கிருதம் அகராதி வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காதது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆளுநர் உள்ளிட்ட விழாவில் கலந்துகொண்ட அனைவரும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செய்த நிலையில், விஜயேந்திரர் மட்டும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின்போது எழுந்து நிற்கவில்லை. ஆனால், தேசியகீதம் இசைக்கும் போதும் மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்று மரியாதை செய்தார். விஜயேந்திரரின் இந்தச் செயல் பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்ததாக காஞ்சி சங்கரமடம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

வங்க மொழியில் பாடப்பட்ட தேசிய கீதத்தைக் கேட்ட உடன் தியானம் கலைந்து டக்கென எழுந்த விஜயேந்திரர். தமிழில் பாடிய வாழ்த்து காதில் வாங்காமல் அமர்ந்துகொண்டிருக்கிறார். தமிழ் தாய் வாழ்த்துக்கு ஏன் மரியாதை தரல? ஏன் எழுந்து நிற்கல என கேட்டால் .. தியானத்தில் இருந்தார், அப்போது கலையவில்லை, அதனால் எழுந்து நிற்கவில்லை,  செம்ம விளக்கம் தந்து கடுப்பக்கியது  சங்கர மடம். ஒருவரால் நினைத்தவுடன் நினைத்த இடத்தில் தியானம் செய்ய முடியுமா? தியானம் குறித்துப் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறிவருகிறார்கள்.

 தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்து 8 கோடி தமிழ் மக்களின் மனதை புண்படுத்திய விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுவும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொருவரோ, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விஜயேந்திரர் மதுரை தமிழ்த் தாய் சிலைக்கு முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதேபோன்று விஜயேந்திரருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜயேந்திரர் பற்றி பேசுபவர்கள் பார்த்து பேசுங்கள் என மிரட்டும் தொனியில் ஒரு பதிவு நம்மிடம் சிக்கியது...

அதில், இதைப்போன்று பேசிய அத்தனை பேரும் ஊர் பேர் தெரியாமல் காணாமல் போய் விட்டார்கள்.

உலக நலனுக்காக சிறு வயதிலேயே அனைத்து சுகங்களையும் தியாகம் செய்து விட்டு மூன்று காலங்களும் சந்திரமௌலீஸ்வர பூஜையை செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களால் ஒரே ஒரு வேளை உப்பு காரம் சரியில்லையென்றால் பொறுத்து கொண்டு சாப்பிட மாட்டீர்கள்.

சங்கர மடத்தின் மீது கை வைத்த அத்தனை பேரும் சர்வ நாசம். ஜெயந்திரரை பூட்ஸ் காலுடன் மடத்துக்குள் நுழைந்து அரெஸ்ட் செய்து கொண்டு போன SP பிரேம்குமார் பைத்தியம் பிடித்து, எந்த கால்கள் பூட்ஸுக்களோடு நுழைந்ததோ அந்த இரண்டு கால்களும் முற்றிய சக்கரை நோயால் வெட்டப்பட்டு பைத்தியமாக இறந்தான், சிம்ம சொப்பனமாக விளங்கிய, நாதியற்று இறந்த ஜெயலலிதாவின் அவல நிலையை உலகமே பார்த்தது, சசிகலாவின் குடும்பமே சின்னாபின்னமாகி விட்டது.

விவரங்கள் எதுவுமே புரியாமல், தெரியாமல் அரைவேக்காட்டு தனமாக, புரட்சிகரமாக பேசுவதாக நினைத்து பிதற்றி கொண்டிருக்காதீர்கள். ஆச்சார்யார்களின் தபோ பலத்துக்கு முன்பு நாமெல்லாம் சிறு புழு பூச்சிகள் போல. குரு நிந்தனை செய்து இகம் பரம் இரண்டையும் அழித்து கொள்ளாதீர்கள்.

நம் வாழ்க்கை ஆஹா ஓஹோ என்று போகிறது என்ற கற்பனையில் வாய்க்கு வந்ததை உளறிக்கொட்டாதீர்கள். ஒரு ஷணம் போதும், உங்கள் நிலைமை தலைகீழாக மாறுவதற்கு, குரு நிந்தனை செய்யாமல் அடக்கமாக வாழ பழகுங்கள்.. இவ்வாறு அந்த பதிவில் ரத்தம் கக்கி சாவான் போன்ற ஒரு எச்சரிக்கை பதிவு உலாவருகிறது.

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!