
உலகின் மிக சிறந்த சொல் ‘செயல்’தான். ஆனாலும் செயலுக்கு இணையான வீரியங்கள் சொல்லுக்கும் உண்டு. அதிலும் சமூகத்தில் முக்கிய நபர்கள் சொல்லும் சொல்லுக்கு ஏற்படும் பக்க விளைவுகளும், வீரியமும் தனியே.
அந்த வீரியமிக்க ‘சொற்களை’ டீல் செய்வதுதான் இந்த பகுதி...
* டி.டி.வி. தினகரனின் பேச்சும், செயல்பாடும் டெல்லி அதிகார மையத்தில் உள்ளவர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் வெளிப்பாடாக அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளது. - ரவீந்திரன் துரைசாமி
* பத்திரிக்கையாளர்கள் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி ‘அரசியலுக்கு வந்துவிட்டீர்களா?’ என்பதுதான். ஆனால் நான் பிறந்ததில் இருந்தே தி.மு.க.தான். என் உடம்பில் திராவிட ரத்தம்தான் ஓடுகிறது.
- உதயநிதி ஸ்டாலின்
* சம்பாதிப்பதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை. ஏற்கனவே சினிமாவில் நிறைய சம்பாதித்துவிட்டேன். நான் இடைத்தேர்தலில் போட்டியிட வந்ததும் பலரும் பயப்படுவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை.
- விஷால்
* ஆணுறை விளம்பரத்தை அடிக்கடி மீடியாக்களில் ஒளிபரப்ப வேண்டும்.
- காஜல் அகர்வால்.
* ஜெயலலிதாவோடு கருத்து மாறுபாடு உண்டுதான். ஆனாலும் அவர் பல நேரங்களில் தமிழக உரிமையை விட்டுக் கொடுத்ததில்லை என்பதை பதிவிட நினைக்கிறேன்.
- கனிமொழி
* சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் கார் துடைப்பது உள்ளிட்ட வீட்டு வேலை செய்தவர்கள்தான் தற்போது பதவிகளில் உள்ளனர்.
- புகழேந்தி
* சம்பள உயர்வு என்பது அரசு ஊழியர்களைப் போலவே எம்.எல்.ஏ.க்களுக்கும் அவசியமானது. எம்.எல்.ஏ.க்களுக்கு பதவி உயர்வா? என கேட்பது அவர்களின் உழைப்பை கேவலப்படுத்துவதற்கு சமம்.
- கோகுல இந்திரா
* பனிரெண்டு ஆண்டுகளாக அம்மா வீட்டின் கதவை கூட தொட முடியாமல் இருந்தவர்கள் இப்போது தனியாக கட்சி நடத்த கிளம்பிவிட்டனர். அவர்களின் சின்னம் 20 ரூபாய்தான்.
- ஜெ.சி.டி.பிரபாகரன்
* போக்குவரத்து கட்டன உயர்வால் எங்கும் போராட்டம் கிளம்பியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் ஒரு அசாதாரண சூழல் உருவாகியுள்ளது. எனவே உடனே சட்டசபையை கூட்டி விவாதிக்க வேண்டும்.
- ஸ்டாலின்
* 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். ஒரு வேளை பாதகமாக திர்ப்பு வந்தால், மேல்முறையீடுக்கு செல்ல மாட்டோம். இடைத்தேர்தலில் நாங்கள் நின்று மீண்டும் வெல்வோம்.
- தங்கத்தமிழ் செல்வன்