'ராஜா'வை சாதிப் பெயரைப் போட்ட நாளிதழை.. காரித் துப்பி கிழித்தெறிந்த கஸ்தூரி! வலைதளங்களில் வைரலாகும் வீடியோ...

First Published Jan 26, 2018, 5:52 PM IST
Highlights
Ilaiyaraja is a national treasure Gods have no caste. Music knows no walls


இசைஞானி இளையராஜாவின் சாதியை தலைப்பில் போட்ட பிரபல ஆங்கில நாளிதழை நடிகை கஸ்தூரி காரித் துப்பி கிழித்தெறிந்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட உள்ள செய்தியை வெளியிட்ட பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று தலைப்பில் அவரின் சாதியை குறிப்பிட்டுள்ளது. இதை பார்த்து இசைஞானியின் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

இசைஞானி இளையராஜா தேசிய பொக்கிஷம். இசைக் கடவுளுக்கு சாதி கிடையாது. இசைக்கு எல்லை இல்லை என கூறி இளையராஜாவின் சாதியை குறிப்பிட்டிருந்த பிரபல நாளிதழை நடிகை கஸ்தூரி காரித் துப்பி கிழித்துப் எறிந்த ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


தமிழ் சினிமா மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே அதிகமாக இசை அமைத்தவர் இளையராஜா.  இசைஞானி இளையராஜாவை சாதியின் பெயரை சொல்லி ஒரு வரையறைக்குள் அவரை கொண்டு வந்துள்ளதை பார்த்து  டிவிட்டரில் தங்களது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளனர்.

 


இசைஞானியை சாதியின் பெயரை சொல்லி ஒரு வரையறைக்குள் அவரை கொண்டு வந்துள்ளதை பார்த்து ஒருவர் தனது ஆதங்கத்தை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுக்கு பத்மவிபூஷன் கிடைத்துள்ளதை பற்றி மட்டும் எழுதாமல் சாதியை இழுத்த நாளிதழை ரசிகர்கள் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும், இளையாராஜாவை பற்றி அவரது சாதியின் பெயரோடு செய்தி வெளியிட்டதை பார்த்து கஸ்தூரி கொந்தளித்ததற்கு ரசிகர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இன்னொருவர், நம்ம ஒற்றுமையா இருந்தாலும் அவனுக விட மாட்டாங்க போல... சாதி பார்த்து பத்திரிக்கைகள் தான் நாட்டின் மிகப்பெரிய தேசவிரோதிகள்... சாதி வெறிபிடித்த மிருகங்கள் எல்லாம் இந்தியாவின் நான்காவது தூணான பத்திரிக்கையை நடத்துவது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என கொந்தளித்துள்ளனர்.

மற்றொருவர், இன்று எவரும் பேதம் சொன்னால் இரண்டு வருடம் ஜெயில் உண்டு இது பல வருடங்களுக்கு முன்பே எழுதப்பட்ட கவியரசின் வரிகள் வாழ்த்த விருப்பமில்லாவிட்டாலும், இப்படி தரம் தாழ வேண்டுமா? இந்த பத்திரிக்கை. எத்தனை வருடம் கொடுத்தால் தகும் ராகத்தால் நம்மை மோகிக்கச் செய்த மேதை, இதையெல்லாம் கடந்தவர். தலித் என்ற வரையறைக்குள் அவரை சிறைப்படுத்தி பார்ப்பது அவரது இசை ஞானத்தையும் சாதனையையும் கொச்சைப்படுத்துவதாகும் என பதிவிட்டுள்ளனர்.

click me!