
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் கணக்கிற்கு, வெரிஃபைடு அந்தஸ்து கிடைத்துள்ளது. ப்ளூ டிக் மார்கை வழஙகி டுவிட்டர் நிறுவனம் இதனை உறுதி செய்துள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு சமூக வலைத்தளமான டுவிட்டரில் கணக்கு உள்ளது.
டுவிட்டரில், அரசு துறை அறிவிப்புகளையும், அவ்வப்பேது தங்களது கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் டுவிட்டர் கணக்கு இதுவரை வெரிஃபைடு செய்யப்படாமலே இருந்தது. இப்போது முதலமைச்சரின் @CMOTamilNadu என்ற இந்த டுவிட்டர் கணக்கிற்கு வெரிஃபைடு அந்தஸ்து கிடைத்துள்ளது.
டுவிட்டர் நிறுவனம், ப்ளூ டிக் மார்க் வழங்கி இதனை உறுதி செய்துள்ளது. எனவே, முதலமைச்சரின் டுவிட்டர் கணக்கு எது என்பதை நெட்டிசன்கள் குழப்பமின்றி அறிந்து கொள்ள முடியும்.