நற்பெயரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..? அவாவில் உடன்பிறப்புகள்..!

Published : May 18, 2021, 01:40 PM IST
நற்பெயரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின்..?  அவாவில் உடன்பிறப்புகள்..!

சுருக்கம்

 சிபாரிசுகளுடன் வருகிறவர்கள் தயவில்தான், குண்டர்கள் ஆட்டம் போடுகிறார்கள். இதை எல்லாம் ஆரம்பத்திலயே, முதல்வர் ஸ்டாலின் கண்டித்து வைக்க வேண்டும். 

காவல்துறையில் மாநில அளவிலான பணியிடங்களை, பெரும்பாலும் முதல்வரே தேர்வு செய்து நியமித்துக் கொள்கிறார். அதே நேரம், மாவட்ட அளவில் டி.எஸ்.பி., உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர் போன்ற பணியிடங்களுக்கு, பசையான பகுதிகளுக்கு மாற்றல் வேண்டி இடங்களை பிடிக்க, கடும் போட்டி நிலவுகிறது. 

மாவட்ட அளவில் பல போலீஸ் அதிகாரிகள், அந்தந்த பகுதி அமைச்சர்கள், மாவட்டச் செயலர்களிடம் சிபாரிசு தேடி நாடுகிறார்கள். சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு தான் கடுமையான போட்டி நடக்கிறது. சேலம் மாவட்டத்துக்கு அமைச்சர் இல்லாததால், மாவட்டச் செயலர்களான ராஜேந்திரன், செல்வகணபதியை பலரும் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். 

இந்த மாதிரி சிபாரிசுகளுடன் வருகிறவர்கள் தயவில்தான், குண்டர்கள் ஆட்டம் போடுகிறார்கள். இதை எல்லாம் ஆரம்பத்திலயே, முதல்வர் ஸ்டாலின் கண்டித்து வைக்க வேண்டும். இல்லை என்றால், அவருக்கு தான் கெட்ட பெயர் வந்து சேரும் என கழக உடன்பிறப்புகளே அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
விஜய் கை ஓங்கிவிடக்கூடாது..! வேகத்தைக் கூட்டும் பாஜக..! அண்ணாமலைக்கு முக்கியப் பொறுப்பு..!