ஆளுநர் மாளிகையில் ரஜினியும் ஆளுநரும் அரசியல் பேசியதில் என்ன தவறு இருக்கிறது.. சீறும் அண்ணாமலை.

By Ezhilarasan BabuFirst Published Aug 10, 2022, 12:45 PM IST
Highlights

ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஆளுநர் அரசியல் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் ஆளுநர் அரசியல் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். அரசியலில் பேசியதாக ரஜினியை கூறியதற்கு சமூகத்தில் நடைபெறும் விஷயங்களை பேசியதாகத் தான் அர்த்தம் என்றும் அண்ணாமலை புதுவிளக்கம் கொடுத்துள்ளார்.

அரசியலுக்கு இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என பல ஆண்டுகளாக தனது ரசிகர்களை அலைக்கழித்து வந்த ரஜினி, கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இனி அரசியலுக்கு வரப் போவதில்லை என திட்டவட்டமாகக் கூறிவிட்டார். பல ஆண்டுகளாக நம்பிக்கையில் இருந்து வந்த அவரது ரசிகர்களுக்கு அது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து உடல்நலக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். 

இதையும் படியுங்கள்: ஆன்மிக ஆட்சியை கொண்டு வருவதே எங்களின் நோக்கம்.. அப்படினா என்ன தெரியுமா? புட்டு புட்டு வைத்த அண்ணாமலை.!

ஆனால் தற்போது சில பொது நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார். இந்நிலையில்  நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகைக்கு சென்ற ரஜினி ஆளுநருடன் உரையாடினார். இது பேசுபொருளாக மாறியுள்ளது, அதுமட்டுமின்றி ஆளுநரை சந்தித்து விட்டுவெளியில் செய்தியாளர்களை சாதித்த அவர், ஆளுனரிடம் அரசியல் பேசியதாகவும், ஆனால் அது குறித்து வெளியில் கூற முடியாது என்றும் அவர் கூறினார். இது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி மீண்டும் அரசியலுக்கு வர திட்டம் போடுகிறார்.

இதையும் படியுங்கள்: ஆர்.எஸ்.எஸ்.காரராகவும், முழு நேர அரசியல்வாதியாகவும் தமிழக ஆளுநர்...! ஆர்.என்.ரவிக்கு எதிராக சீறிய திருமாவளவன்

ரஜினியை வைத்து அரசியல் காய்களை நகர்த்த பாஜக திட்டமிடுகிறது என பலரும் இது குறித்து பேசி வருகின்றனர். அரசியல் பேசியதாக கூறும் ரஜினி என்ன அரசியல் போசினோம் என்பதை ஏன் வெளிப்படையாக கூற மறுக்கிறார் இதில் பின்னணியில் நடக்கும் சதி என்ன என்றும் கேள்வி எழுப்புகின்றனர். பலரும் பல வகையில் ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பாக பதிலளித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ரஜினி ஆளுநரை  சந்தித்து பேசியதில் தவறு என்ன என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வங்க கடலில் பாஜக மீனவர் அணி சார்பில் இன்று மூவண்ணக்கொடி பேரணி சென்னை நீலாங்கரை கடற்கரையில் நடந்தது. அதில் அண்ணாமலை கலந்து கொண்டார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் மாளிகையில் நடிகர் ரஜினியிடம் ஆளுநர் அரசியல் பேசியது என்ன தவறு, நாட்டில் சர்வதேச உலக அளவில் நடக்கும் நிகழ்வுகளை பேசிக் கொள்வதும் அரசியல்தான்.

சமூகத்தில் நடைபெறும் விஷயங்களை பேசுவதும் அரசியல்தான், மொத்தத்தில் அரசியல் பேசினேன் என ரஜினி கூறியதில் என்ன தவறு இருக்கிறது? சாதாரண மக்களை கூட ஆளுநர் சந்திக்கிறார், ரஜினி ஆளுநர் சந்திப்பு அரசியலாக நினைக்காதீர்கள், யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம் என அவர் கூறியுள்ளார்.
 

click me!