ஆர்.எஸ்.எஸ்.காரராகவும், முழு நேர அரசியல்வாதியாகவும் தமிழக ஆளுநர்...! ஆர்.என்.ரவிக்கு எதிராக சீறிய திருமாவளவன்

By Ajmal KhanFirst Published Aug 10, 2022, 11:18 AM IST
Highlights

ரஜினி யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம்,அரசியல் பேசலாம்.அதில் கருத்து இல்லை; ஆனால் ஆளுநர் தன்னுடைய பொறுப்பை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

நடிகர் ரஜினி காந்த் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், தமிழகத்தை ஆளுநர் மிகவும்  நேசித்து கொண்டுள்ளார். தமிழக மக்களுடைய நேர்மை கடின உழைப்பு இதெல்லாம் ஆளுநருக்கு மிகவும் பிடித்துள்ளதாக தெரிவித்தார். அப்போது அரசியல் தொடர்பாக பேசுனீர்களா என்ற கேள்விக்கு ஆமாம் என தெரிவித்த ரஜினி அது  தொடர்பாக வெளியில் கூற இயலாது என கூறி இருந்தார். இதனையடுத்து  ஆளுநர் அலுவலகம் அரசியல் அலுவலகமாக மாறிவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து இருந்தனர். இந்தநிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,  ரஜினிகாந்த் யாரையும் சந்திக்கலாம். யாருடனும் அரசியல் பேசலாம். அதில் கருத்து எதுவும் இல்லை. ஆனால், ஆளுநர் தன்னுடைய பொறுப்பை மீறித் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அரசியல் அலுவலகமா ஆளுநர் மாளிகை? ரஜினியிடம் அரசியலை பேச வேண்டிய அவசியம் என்ன..? கே.பாலகிருஷ்ணன் கேள்வி

அவருடைய அரசியல் கடமை மாநில-மத்திய அரசுகளுக்கான இணைப்பை உருவாக்க வேண்டியது தான். ஆனால், அவர் ஆர்.எஸ்.எஸ்.காரராக முழு நேர அரசியல்வாதியாகச் செயல்படுகிறார். ஆளுநரின் போக்குகள் மாநில அரசுக்கு மட்டுமல்லாமல் தேசிய அளவில் ஜனநாயகத்திற்கு முரணாக சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக இருப்பது கவலை அளிக்கிறது எனக் கூறினார்.தொடர்ந்து பேசிய திருமாவளவன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் எதிர்க்கட்சிகளின் குரல் வளையை நெறிக்கக் கூடியதாகவும், நசுக்கக் கூடியதாக இருந்ததாக தெரிவித்தார். 12-ஆம் தேதி வரை கூட்டத் தொடர் நடைபெற இருந்த நிலையில்,  4 நாட்களுக்கு முன்னதாக நிறைவு செய்து விட்டார்கள் என விமர்சித்தார். மாநிலங்களவை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 18 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டதாக கூறிய திருமாவளவன், எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தம் காரணம் உறுப்பினர்களின் இடைநீக்கம் திரும்பப் பெற்றனர் எனக் கூறினார்.

5ஜி ஏலத்தில் 3 லட்சம் கோடி முறைகேடு...!அம்பானி, அதானி பிரதமரின் இரு கண்கள்- சீமான் ஆவேசம்

ஜனநாயகத்தை நெறிக்கக் கூடிய கூட்டத் தொடராக இந்தக் கூட்டத்தொடர் இருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.  பா.ஜ.க.விற்கு ஒரு அச்சுறுத்தல் தரக்கூடிய வகையில் நிதிஷ்குமார் எடுத்துள்ள முடிவு வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாக உள்ளது என பாராட்டு தெரிவித்தார். பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகி நிதிஷ்குமார் புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கிறார். இந்தியா முழுவதும் இது போல் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைய வேண்டும் எனவும் திருமாவளவன்  கேட்டுக்கொண்டார்.

இதையும் படியுங்கள்

இபிஎஸ்..? ஓபிஎஸ்.? யார் கை ஓங்கும்.. பொதுக்குழு தீர்மானம் செல்லுமா.. நீதிமன்றத்தில் இன்று விசாரணை

 

click me!