நீங்கள் செய்வது அநியாயம்... அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இப்படி ஆடலாமா? பிஜேபியை கிழிக்கும் மூத்த தலைவர் சத்ருகன் சின்கா

 
Published : May 18, 2018, 10:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
நீங்கள் செய்வது அநியாயம்... அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு இப்படி ஆடலாமா? பிஜேபியை கிழிக்கும் மூத்த தலைவர் சத்ருகன் சின்கா

சுருக்கம்

What is right for Meghalaya Manipur Goa should be right for Karnataka too

மேகாலயா, கோவா மற்றும் மணிப்பூரில் நீங்கள் (பிஜேபி.) செய்தது சரியென்றால், கர்நாடகாவில் காங்கிரஸ், ம.த.ஜ. கூட்டணி செய்ததும் சரியாகத்தான் இருக்கும். என பிஜேபி மூத்த தலைவர் சத்ருகன் சின்கா தெரிவித்துள்ளார். 

நடந்து முடிந்த கர்நாடக சட்டசபைத் தேர்தலில் 104 தொகுதிகளைக் கைப்பற்றியது, 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் மற்றும் 37 தொகுதிகளில் வெற்றிபெற்ற ம.ஜ.த கூட்டணி அமைத்தபோதும் தனிப்பெரும் கட்சியான  பா.ஜ.க. ஆட்சியமைத்திருக்கிறது. கர்நாடகாவின் 23ஆவது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றிருக்கிறார். ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியுடன் ஆட்சியமைக்கக் கோருகிறது. இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், கர்நாடக ஆளுநரின் போக்கு ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான சத்ருகன் சின்கா தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாம் எதற்காக நெருப்போடு விளையாடிக் கொண்டிருக்கிறோம்? ஜனநாயகத்தின் தொண்டர்கள் என தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நாம்தான் மொத்த எந்திரத்தையும் கேலிக்கூத்தாக்கி இருக்கிறோம். ஜனநாயகத்தைக் கொல்லும் பணநாயகம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததும், விரும்பத்தகாததும் ஆகும். பொறுத்திருப்போம்.. நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும் என காத்திருப்போம்.

பீட்டருக்கு ஒன்று நியாயம் என்றால் பாலுக்கும் அதேதான் தர்மம். மேகாலயா, கோவா மற்றும் மணிப்பூரில் பிஜேபி செய்தது சரியென்றால், கர்நாடகாவில் காங்கிரஸ், ம.த.ஜ. கூட்டணி செய்ததும் சரியாகத்தான் இருக்கும். கர்நாடகா மற்றும் ஜனநாயகத்தைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். ஜெய்ஹிந்த்’ என பதிவிட்டுள்ளார். 

PREV
click me!

Recommended Stories

அண்ணாமலை என்ற நாயின் வாலை நிமிர்த்த முடியாது.. நான் மோடிக்கு விசுவாசமானவன்.. திடீரென பொங்கிய அண்ணாமலை
தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!