காங்கிரஸ், மஜத-வின் நள்ளிரவு நடவடிக்கை!! ஹைதராபாத்தில் எம்.எல்.ஏக்கள்

 
Published : May 18, 2018, 10:21 AM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
காங்கிரஸ், மஜத-வின் நள்ளிரவு நடவடிக்கை!! ஹைதராபாத்தில் எம்.எல்.ஏக்கள்

சுருக்கம்

congress and jds mlas are in hyderabad

குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் ஹைதராபாத் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த 12ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆர்.ஆர்.நகர், ஜெயா நகர் ஆகிய இரண்டு தொகுதிகளை தவிர மற்ற 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  கடந்த 15ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பாஜக 104 இடங்களையும் காங்கிரஸ் 78 இடங்களையும் மஜத 38 இடங்களையும் கைப்பற்றியது. 2 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.

பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தொங்கு சட்டசபை அமைந்தது. மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளித்ததால், அந்த கூட்டணி 115 எம்.எல்.ஏக்களை(குமாரசாமி இரண்டு இடங்களில் வென்றுள்ளதால் ஒரு இடம் காலியாகும்) கொண்டுள்ளது. எனவே 115 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றுள்ள தங்களை ஆட்சியமைக்க மஜத தலைவர் குமாரசாமி ஆளுநரிடம் உரிமை கோரினார்.

அதேநேரத்தில் 104 எம்.எல்.ஏக்களை பெற்று தனிப்பெரும் கட்சியாக பாஜக இருப்பதால், எடியூரப்பாவும் ஆட்சியமைக்க உரிமை கோரினார். கர்நாடக ஆளுநர், எடியூரப்பாவிற்கே அழைப்பு விடுத்தார். நேற்று காலை கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். 104 எம்.எல்.ஏக்களை மட்டுமே பாஜக பெற்றுள்ள நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார் ஆளுநர் வஜூபாய் வாலா.

எனவே இந்த 15 நாட்களில் குதிரைபேரம் நடக்க வாய்ப்புள்ளதால், காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை அந்த கட்சிகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. எனவே மைசூர் சாலையில் உள்ள ஈகிள்டன் ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் போலீஸ் பாதுகாப்புடன் தங்கவைக்கப்பட்டனர். எடியூரப்பா நேற்று காலை முதல்வராக பதவியேற்றதும், அந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. இதையடுத்து எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வெளி மாநிலங்களுக்கு அழைத்து செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, பாஜகவை வீழ்த்த துடித்து கொண்டிருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர், காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களுக்கு பாதுகாப்பளிக்க முன்வந்தனர். தங்கள் மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்கு உதவுவதாக தெரிவித்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் நேற்று இரவு ஹைதராபாத் அழைத்து செல்லப்பட்டனர். காங்கிரஸில் மூன்று எம்.எல்.ஏக்களை தவிர மற்ற 75 எம்.எல்.ஏக்கள் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் ஆகியோர் ஹைதராபாத் அழைத்து செல்லப்பட்டனர். 
 

PREV
click me!

Recommended Stories

அன்புமணியின் ஆட்டம் ஆரம்பம்..! ஜிகே மணி அதிரடி நீக்கம்..!
இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!