பிள்ளை பிறக்கவே 10 மாதம் ஆகிறது.. ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் என்ன செய்ய முடியும்.. அமைச்சர் துரைமுருகன்..!

By vinoth kumarFirst Published Oct 1, 2021, 11:20 AM IST
Highlights

பஞ்சாயத்து தலைவர் நல்லவனா இருந்தா 30 லைட்டையும் ஊருக்கு போடுவார். கெட்ட தலைவனா இருந்தா 5 லைட்டு போட்டு மீதிய பொண்டாட்டிக்கு கம்மல்லா போட்டுருவார். அதனால நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். புதியதாக கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரே மாதத்தில் மின்சாரம் எங்கள் ஆட்சியில் கொடுக்கப்படும். 

50 ஆண்டுகாலம் எனக்கு கண் கண்ட தெங்வங்களாக இருந்தவர்கள் இந்த காட்பாடி மக்கள் தான் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு, காட்பாடி ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 6-ம் தேதி முதற் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தாதிரெட்டி கிராமத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசுகையில்;- நான் கேட்காமலேயே ஓட்டு போடுவிங்க. ஆனா, யாராவது ஒருத்தர் துரைமுருகன் வந்து ஓட்டு கேட்டானானு சொல்லக்கூடாது என்பதற்காக ஓட்டு கேட்க வந்துள்ளேன். காட்பாடியில் வெற்றி பெற காரணம் இந்த தொகுதியை கோவிலாக பார்க்கிறேன். ஓட்டு போட்டவர்கள் என்னை வாழ வைத்த தெய்வங்களாக கருதுகிறேன். யாரொருவன் ஓட்டு போட்டவர்களை நன்றிக்குறியவர்களாக பார்க்கிறானோ அவன் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். ஆனால் ஓட்டு போட்டவர்களை யாரோ என நினைப்பவர்கள் அந்த ஊருக்குள்ளேயே மறு முறை செல்ல முடியாது.

50 ஆண்டுகாலம் எனக்கு கண் கண்ட தெங்வங்களாக இருந்தவர்கள் இந்த காட்பாடி மக்கள் தான். நான் இப்போது பதவியில் இருக்கும் போது மக்களுக்கு நன்மை செய்யாவிட்டால் நான் இருந்தா என்ன செத்தா என்ன உருக்கமாக பேசினார். 

மேலும், பஞ்சாயத்து தலைவர் நல்லவனா இருந்தா 30 லைட்டையும் ஊருக்கு போடுவார். கெட்ட தலைவனா இருந்தா 5 லைட்டு போட்டு மீதிய பொண்டாட்டிக்கு கம்மல்லா போட்டுருவார். அதனால நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். புதியதாக கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் விவசாயிகளுக்கு ஒரே மாதத்தில் மின்சாரம் எங்கள் ஆட்சியில் கொடுக்கப்படும். ஆட்சிக்கு வந்த இந்த 3 மாதத்தில் என்ன செய்தீர்கள் என கேட்கிறார்கள். பிள்ளை பிறக்கவே 10 மாதம் ஆகிறது. இந்த 3 மாதத்தில் என்ன செய்ய முடியும் என தெரிவித்துள்ளார்.

click me!