ஆளுநர் உரையில் இடம்பெற்று இருந்த முக்கிய அம்சங்கள் என்ன.? ஆர்.என்.ரவி புறக்கணிக்க இதுதான் காரணமா.?

By Ajmal Khan  |  First Published Feb 12, 2024, 1:46 PM IST

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முன்னேறியுள்ளது. தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாக  தமிழக அரசின் உரையில் இடம்பெற்றிருந்த நிலையில் ஆளுநர் உரையை புறக்கணிகத்தது பலவித கேள்வியை எழுப்பியுள்ளது. 


உரையை புறக்கணித்த ஆளுநர் ரவி

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையுடன் இன்று காலை சட்டப்பேரவை தொடங்கியது. அப்போது சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்கு முன்பாக பேசிய ஆளுநர் ரவி, சட்டபேரவையில் கூட்டம் தொடங்கும் போது  தேசிய கீதம் பாடவேண்டும் என்றும்,முடியும் போதும் பாட வேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்க்கப்படவில்லை என தெரிவித்தவர், அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை. உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்கவிரும்பவில்லையென தெரிவி்த்தார். இதனையடுத்து வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் எனக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். 

Tap to resize

Latest Videos

இதனை தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார், அதில் தமிழக சட்டம் ஒழுங்கு, பொருளாதார வளர்ச்சி, சிஏஏ சட்டம் அமல்படுத்துவது தொடர்பான கருத்துகள் இடம்பெற்றுள்ளது. ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் தற்போது காணலாம்.. 

  • தமிழ்நாட்டின் பணவீக்கம் 5. 97 சதவிகிதமாக உள்ளது.  நாட்டை விட தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைவதோடு அதே காலகட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் தமிழகம் திறம்பட செயல்பட்டு வருகிறது.

 

  • மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் பெரும் முன்னேற்றத்தினால் 2021- 22 ஆம் ஆண்டில் 4ஆம் இடத்தில் இருந்த தமிழகம் 2022-23 ஆம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. நிதி ஆயோக்கின் 22 ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின்படி மகாராஷ்டிரா,கர்நாடக, குஜராத் ஆகிய மாநிலங்களை விஞ்சி நாட்டிலேயே முதல் மாநிலமாக திகழ்கிறது.

 

  • கடந்த 2022 ஆம் ஆண்டு சரக்கு மட்டும் சேவை வரி இழப்பிட்டி முறையை மத்திய அரசு  நிறுத்தியதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுக்கு ஏறத்தாழ 20 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது

 

  • மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டதிட்ட பணிகளுக்கு தனது பணங்களிப்பை வழங்குவதாக உறுதி அளித்த மத்திய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

 

  • சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு மாநில அரசு முன்னுரிமை வழங்குவதினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களால் தமிழ்நாடு அமைதியான மாநிலமாக கருதப்படுகிறது.

 

  • மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும், மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.

 

  • ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக விடுதியில் மாதாந்திர உணவு கட்டணத்தை பள்ளி மாணவருக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி மாணவர்களுக்கு 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் அரசு உயர்த்தி உள்ளது.

 

  • சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்திட பிரதமர் மோடி அவர்களை கேட்டுக் கொண்டுள்ளது.

 

  • தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டிட தமிழகஅரசு உறுதியாக உள்ளது.  விவசாயிகளின் நலன்களை பாதுகாத்திட தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்.

 

  • மீனவர்கள் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண வேண்டுமென மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்துவோம்.

 

  • திருக்கோவில்கள் சொத்துக்கள் மற்றும் நிலங்களை பாதுகாப்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது.  இதுவரை கோயில்கள் மற்றும் அறநிலையங்களுக்கு சொந்தமான 5579 கோடி ரூபாய் மதிப்புள்ள 671 ஏக்கர் நிலங்கள் இந்த அரசு ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. 

 

  • திமுக அரசு பதவி ஏற்றது முதல் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமின்றி அவர்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி அவர்கள் தேவைகளையும் நிறைவு செய்துள்ளது.

 

  •  தமிழகத்தை மத நல்லிணக்கத்தை பேணி காப்பதில் அரசு உறுதியாக உள்ளது சிறுபான்மையினர் மற்றும் இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாத்து அவர்களுடன் என்றும் நாம் துணை நிற்போம்.  அந்த வகையில் மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் ஒருபோதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என இந்த அரசு உறுதியாக உள்ளது என ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது. 
click me!