தமிழக பட்ஜெட் எப்போது.? எத்தனை நாட்கள் சட்டசபை நடைபெறுகிறது.? அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு அறிவிப்பு

By Ajmal Khan  |  First Published Feb 12, 2024, 12:26 PM IST

 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரானது வருகின்ற 22 ஆம் தேதி வரை நடைபெறும் என அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 19-ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


உரையை புறக்கணித்த ஆளுநர்

ஆண்டுதோறும் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டமானது தொடங்கும்.  அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆளுநர் உரையானது இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக தமிழக அரசு சார்பாக ஆளுநருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்த நிலையில், தனது இருக்கைக்கு வந்த ஆளுநர் ரவி, தமிழக அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை.

Tap to resize

Latest Videos

உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்கவிரும்பவில்லையென தெரிவித்து  தனது உரையை முடித்துக்கொண்டார். இதன் காரணமாக சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு மொழி பெயர்த்தார். 

சட்டப்பேரவையில் இருந்து கோபமாக வெளியேறினார் ஆளுநர் ஆர்.என். ரவி; அப்படி என்னதான் சபாநயகர் பேசினார்?

விஜயகாந்திற்கு இரங்கல்

இறுதியாக தேசிய கீதம் வாசிக்கப்படுவதற்கு முன்பாக ஆளுநர் ரவி சட்டப்பேரவை கூட்டத்தில் இருந்து வெளியேறினார்.  இதனை தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு அறையில் அலுவல் ஆய்வு குழு கூட்டமானது நடைபெற்றது.  இந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் எந்தெந்த தேதியில் அலுவல்களை வைத்துக் கொள்வது என்பது குறித்து திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்ட கூட்டமானது நடைபெற்றது.  

இந்த கூட்டத்தில்  நாளை தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் திர்மானம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.  இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் வெங்கட்ராமன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ் எஸ் பத்ரிநாத், தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழக அரசின் முன்னாள் ஆளுநர் எம் எம் ராஜேந்திரன் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.  இதனை தொடர்ந்து ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் இது விவாதம் நாளை நடைபெற உள்ளது.

19ஆம் தேதி தமிழக பட்ஜெட்

அடுத்த நாள்  14 மற்றும் 15ஆம் தேதி ஆளுநர் உரை மீதான விவாதமும் 15ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் பதிலுரையும் வழங்க உள்ளார். இதனையடுத்து வருகின்ற 16 ,17, 18 ஆகிய மூன்று தினங்களும் சட்டப்பேரவை கூட்டமானது விடுமுறை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து 19ஆம் தேதி திங்கட்கிழமை தமிழக சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையானது தாக்கல் செய்யப்பட உள்ளது.  செவ்வாய்க்கிழமை 20 ஆம் தேதி வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது தாக்கல் செய்யப்பட உள்ளது.  தொடர்ந்து 21 மற்றும் 22 ஆம் தேதி ஆகிய நாட்களில் சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று பதிலுரை வழங்கப்பட உள்ளது. அன்றோடு சட்டசபை கூட்டமானது முடிவடையவுள்ளது.

இதையும் படியுங்கள்

ஆளுநர் பேச்சு நீக்கம்... அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும்- சட்டப்பேரவையில் அதிரடி தீர்மானம்


 

click me!