தமிழக சட்டப்பேரவை துவக்கத்தில் தேசிய கீதம் பாடப்படவில்லையெனக்கூறி ஆளுநர் தனது உரையை புறக்கணித்து தமிழக அரசை விமர்சனம் செய்திருந்தார். இந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியும், அரசு தயாரித்த உரை மட்டுமே இடம்பெறும் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
தேசிய கீதம் வாசிக்கப்படவில்லை
தமிழக சட்டப்பேரவையில் இந்தாண்டிற்கான முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ரவியின் உரையோடு இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று காலை 9.55 மணியளவில் ஆளுநர் ரவி சட்டப்பேரவைக்கு வந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பாக மரியாதை அளிக்கப்பட்டது. சிவப்பு கம்பள வரவேற்பில் தனது இருக்கைக்கு ஆளுநர் வந்தார். தொடர்ந்து தமிழ்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அடுத்து தமிழக ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்கத்தொடங்கினார். ஆரம்பத்தில் தமிழில் முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர், எம்எல்ஏக்கள், சட்டசபை அலுவலகர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் தொடங்கும் போது வாசிக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டை கூறினார்.
undefined
அவையில் இருந்து வெளியேறிய ஆளுநர்
தமிழக அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை. உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்கவிரும்பவில்லையென தெரிவித்து தனது உரையை முடித்துக்கொண்டார். இதன் காரணமாக சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ரவியின் உரையை தமிழில் மொழிபெயர்த்தார். ஆளுநர் உரையை தமிழில் மொழி பெயர்த்த பிறகு இறுதியாக பேசிய சபாநாயகர் அப்பாவு,தமிழ்நாடு அரசு ஆளுநர் உரைக்கு ஒப்புதல் பெறப்பட்டு இன்று வாசிக்கவந்தார். குறைவாக வாசித்தார் அதனை நான் குறையாக சொல்லவில்லை.
தேசிய கீதம்- சபாநாயகர் விளக்கம்
ஜனகன பாடியிருக்க வேண்டும் என கூறியிருந்தார். கருத்து, கொள்கை வேறபாடு இருந்தாலும் ஆளுநருக்கான வரவேற்கும் பன்பு குறையவில்லை. சவார்கர் வழியில் கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள், இந்த சட்ட மன்றத்தில் இருப்பவர்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லையென தெரிவித்தார். இதனையடுத்து அடுத்த நிமிடமே சட்டசபை கூட்டத்தில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார். தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார். நாட்டுப்பண் இசைப்பது கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஆளுநர் கடிதம் எழுதினார்.
இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அரசியல் அமைப்பு சட்டத்தை சட்டப்பேரவை மதித்து பின்பற்றி வருகிறது. நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்தும், இறுதியில் நாட்டுப்பண் பாடப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
ஆளுநர் பேச்சு நீக்கம்
இதனை தொடர்ந்து அவை முன்னவர் துரைமுருகன் ஆளுநர் உரை தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தார். இதனை சபாநாயகர் அப்பாவு சட்டமன்ற உறுப்பினர்களின் ஒப்புதலோடு நிறைவேறியது. இதனையடுத்து ஆளுநர் உரை தொடர்பாக வழங்கிய உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் வேறு ஏதும் இடம்பெறாது என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
சட்டப்பேரவையில் இருந்து கோபமாக வெளியேறினார் ஆளுநர் ஆர்.என். ரவி; அப்படி என்னதான் சபாநயகர் பேசினார்?