சட்டப்பேரவையில் இருந்து கோபமாக வெளியேறினார் ஆளுநர் ஆர்.என். ரவி; அப்படி என்னதான் சபாநயகர் பேசினார்?

By Ajmal Khan  |  First Published Feb 12, 2024, 11:07 AM IST

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு இறுதியில் பேசிய போது சவார்கர் வழியில் கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்று கூறியவுடன் அவையில் தேசிய கீதம் பாடி முடிக்கப்படுவதற்கு முன்பாகவே சபையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி  


தமிழக சட்டபேரவை கூட்டம்

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் இன்று காலை தொடங்கியது. அப்போது தமிழக சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநர் ரவிக்கு தமிழக அரசு சார்பாக மரியாதை வழங்கப்பட்டது. சட்டசபையில் ஆளுநர்  இருக்கைக்கு வந்ததும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதனை தொடர்ந்து ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்க தொடங்கினார். அப்போது தமிழில் பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின், சபாநாயகர், சட்டசபை அலுவர்களுக்கு வணக்கம் தெரிவித்தார். இதனையடுத்து தனது உரையை தொடங்கிய ஆளுநர், சட்டபேரவையில் கூட்டம் தொடங்கும் போது  தேசிய கீதம் பாடவேண்டும் என்றும்,முடியும் போதும் பாட வேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்க்கப்படவில்லை என தெரிவித்தவர், 

Tap to resize

Latest Videos

🔴 LIVE : Tamilnadu Legislative Assembly - ஆளுநர் RN Ravi உரை | 2024 - 25

உரையை புறக்கணித்த ஆளுநர் ரவி

அரசின் உரையை வாசித்தால் அரசியலமைப்பு சட்டத்தில் குழப்பம் ஏற்படும் என்பதால் வாசிக்கவில்லை. உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருந்ததால் முழுமையாக வாசிக்கவிரும்பவில்லையென தெரிவி்த்தார். இதனையடுத்து வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் எனக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். இதன் காரணமாக சட்டப்பேரவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ரவியின் உரையை தமிழில் மொழிபெயர்த்தார். இறுதியாக தனது உரையை சபாநாயகர் அப்பாவு முடித்த பின்னனர் கூறுகையில், தமிழ்நாடு அரசு ஆளுநர் உரைக்கு ஒப்புதல் பெறப்பட்டு இன்று வாசிக்கவந்தார். குறைவாக வாசித்தார் அதனை நான் குறையாக சொல்லவில்லை. ஜனகன பாடியிருக்க வேண்டும் என கூறியிருந்தார். கருத்து, கொள்கை வேறபாடு இருந்தாலும் ஆளுநருக்கான வரவேற்கும் பன்பு குறையவில்லை.  

சட்டசபையில் இருந்து வெளியேறிய ஆளுநர்

தமிழகத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட போது உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை. பல லட்சம் பிரதமர் நிதியில் உள்ளது. எனவே ஆளுநர் 50ஆயிரம் கோடி வாங்கி தரவேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறினார். தொடர்ந்து பேசிய அப்பாவு, சவார்கர் வழியில் கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள், இந்த சட்ட மன்றத்தில் இருப்பவர்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லையென தெரிவித்தார். இதனையடுத்து அடுத்த நிமிடமே சட்டசபை கூட்டத்தில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார். அப்போது சபாநாயகர் தேசிய கீதம் வாசிக் கப்படுகிறது என கூறினார். இருந்த போதும் சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி வெளியே சென்றார்.

இதையும் படியுங்கள்

சட்டப்பேரவையில் 3 நிமிடத்தில் பேச்சை முடித்த ஆர்.என். ரவி... தேசிய கீதம் இசைக்கவில்லையென குற்றச்சாட்டு

click me!