மாணவி செத்து 3 நாள் ஆச்சு... அன்பில் மகேஷ் சும்மா விட மாட்டோம்.. திமுக அரசை திகிலாக்கும் அண்ணாமலை.

By Ezhilarasan Babu  |  First Published Jul 16, 2022, 6:03 PM IST

தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்து மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை அவரது பெற்றோர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏன் சந்திக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.


தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி உயிரிழந்து மூன்று நாட்கள் ஆகியும் இதுவரை அவரது பெற்றோர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏன் சந்திக்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்நிலையில் " மாணவி ஸ்ரீமதிக்கு மறுக்கப்படும் நீதி "  என்ற தலைப்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் விவரம் பின்வருமாறு:- கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி, கல்லக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் மூன்று தினங்களுக்கு முன் அந்தப் பள்ளி வளாகத்தில் அவர் தங்கியிருந்த விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஸ்ரீமதி இறந்து நான்கு நாட்கள் ஆன பிறகு அவர்களது பெற்றோர் மாணவியின் உடலை வாங்க மறுத்த பிறகு இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி செல்வகுமார் அந்த கனியாமூர் தனியார் பள்ளியில் ரத்தக் கறைகளை கண்டு பிடித்ததாகவும் அதனை விசாரணைக்கு உட்படுத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

காவல்துறையின் மெத்தன போக்கு ஒரு பக்கமிருக்க இப்படிப்பட்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது அறிந்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் இன்றுவரை இறந்த மாணவியின் குடும்பத்தை சந்திக்காமல் இருப்பது தற்போதைய ஆட்சியின் அவல நிலையின் வெளிப்பாடு.

மாணவி ஸ்ரீமதி கடந்த 12ஆம் தேதி இரவு தான் தங்கியிருந்த விடுதியில் இரறந்து போனதாக கூறப்படுகிறது, ஆனால் மாணவியின் தாய்க்கு மறுநாள் காலை 6 மணி அளவில் போன் செய்த விடுதி நிர்வாகம் உங்கள் மகளை கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளோம் உடனே வாருங்கள் என கூறியிருக்கின்றனர்.

பின்னர் அரைமணி நேரம் கழித்து உங்கள் மகள் இறந்து விட்டார் என தெரிவித்துள்ளனர், மருத்துவமனைக்கு சென்று விசாரித்தபோது உங்கள் மகள் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்னரே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. மாணவியின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய சிபிசிஐடி விசாரணை தேவை என தமிழக பாஜக இந்த அறிக்கை மூலம் வலியுறுத்துகிறது.

மூன்று நாட்களாக பொறுத்து இருந்தோம், ஆனால் இந்த சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கவலை அளிக்கும் விதமாக உள்ளது. சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து மாணவியின் இழப்பிற்கு உண்மையான காரணத்தை கண்டறிந்து இதில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்,

பெற்ற மகளை இழந்து அவரது உடலைக் கூட வாங்காமல் தங்கள் மகளுக்கு கிடைக்க வேண்டிய நீதிக்காக தவிக்கும் பெற்றோர்களுக்கு திமுக அரசு பதில் சொல்ல வேண்டும். நியாயமான விசாரணையில் உரிய நீதி கிடைக்கப் பெற்று குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும். ஸ்ரீமதி அவர்களின் குடும்பத்திற்கு தமிழக பாஜக என்றும் துணை நிற்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

click me!