சபாஷ்.. இப்பதான் சரியான முடிவெடுத்திருக்கிறது தமிழக அரசு.. மனதார பாராட்டும் சீமான்.

By Ezhilarasan BabuFirst Published Jun 30, 2021, 11:27 AM IST
Highlights

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக ஐயா சைலேந்திரபாபு அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து மகிழ்வுற்றேன். தகுதியும், திறமையும் கொண்டு, அர்ப்பணிப்புணர்வோடு அயராது பணியாற்றுபவர் சேலேந்திர பாபு என நம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக ஐயா சைலேந்திரபாபு அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து மகிழ்வுற்றேன். தகுதியும், திறமையும் கொண்டு, அர்ப்பணிப்புணர்வோடு அயராது பணியாற்றுபவர் சேலேந்திர பாபு என நம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தற்போதைய டிஜிபி திரிபாதியின் பதவிக்காலம் இன்றுடன் (ஜூன் 30) முடிவடைகிறது நேற்றைய முன் தினம் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லி யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழக புதிய டி.ஜி.பிக்கான போட்டியில்  சைலேந்திரபாபு, கரம் சின்ஹா ,சஞ்சய் அரோரா, கந்தசாமி, ஷகில் அக்தர் உட்பட 7 பேர் உள்ளனர். 

இதனையடுத்து தற்போது தமிழ்நாட்டின் புதிய டி.ஜி.பியாக சைலேந்திரபாபுவை நியமித்துள்ளது தமிழக அரசு. கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த சைலேந்திரபாபு, 1987 ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாக பணிக்கு தனது 25 வயதில்  சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு காவல் பணிநிலைகளில் பணிபுரிந்த சைலேந்திரபாபு  மூன்று ஆண்டுகள் கடலோர பாதுகாப்பு படையின் தலைவராகவும் செயல்பட்டவர், சைலேந்திரபாபு தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள்துறை, ரயில்வே காவல்துறை டி.ஜி.பியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அவர் தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதை வரவேற்று பலரும் தமிழக அரசை பாராட்டி வருகின்றனர் இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

தமிழ்நாடு காவல்துறையின் புதிய தலைமை இயக்குநராக ஐயா சைலேந்திரபாபு அவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கும் செய்தியறிந்து மகிழ்வுற்றேன். தகுதியும், திறமையும் கொண்டு, அர்ப்பணிப்புணர்வோடு அயராது பணியாற்றி, தனது சீரிய செயல்பாடுகளின் மூலம் இளைய தலைமுறையினரின் மனம்கவர்ந்த முனைவர் சைலேந்திர பாபு அவர்களை இப்பொறுப்புக்குத் தேர்வுசெய்திருப்பது மிகப்பொருத்தமானதாகும். அவரது பணிகள் சிறக்கவும், சட்டம் ஒழுங்கைச் சிறப்பான முறையில் பேணிகாத்து சமூக அமைதியை நிலைநாட்டவும் எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்! என தனது டுவிட்டர் பக்கிதில் சீமான் தெரிவித்துள்ளார். 
 

click me!