சிறுபான்மையின மக்கள் மீது அன்பும், கரிசனமும் கொண்டவர் ஸ்டாலின்.. வானளவு புகழ்ந்த பீட்டர் ஆல்போன்ஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jun 30, 2021, 11:09 AM IST
Highlights

சிறுபான்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னை தலைமை செயலகத்தில் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த பின்  பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

சிறுபான்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னை தலைமை செயலகத்தில் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்த பின்  பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, நல்ல எண்ணத்தின் தூதுவராக தான் இதை நான்பார்க்கிறேன், முதலமைச்சர் என் மீது வைத்த நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படுவேன். 

மேலும், தமிழகத்தில் இருக்கும் சிறுபான்மை மக்களின்  கோரிக்கைகள், தேவைகள், உரிமைகள் பற்றிய கவனத்தினை அரசிடம் பெற்றுத் தருவதற்காக, அரசாங்கம் தருகின்ற நல்ல திட்டங்கள், பயன்களை அவர்களுக்கு சென்றடைவதற்கான ஏற்பாடுகளை செய்வேன், சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் அவற்றின் கல்வி வளர்ச்சி இவற்றையெல்லாம் ஒருங்கிணைப்பதற்கும், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவும், சமூக நீதி ஏற்படுத்துவதற்காகவும், சிறுபான்மை தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு எப்படி சிறுபான்மையின மக்களை பயன்படுத்த முடியும் என்பது போன்ற விஷயங்களை எல்லாம் ஒருங்கிணைப்பதற்கான பணி தனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணியை வெற்றிகரமாக செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் என்றார்.

கலைஞரை தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மை மக்கள் மீது கொண்டிருக்கின்ற அன்பிற்கும் கரிசனத்திற்கும்  ,சிறுபான்மை மக்கள் கடமை பட்டு இருக்கிறார்கள், அந்த வகையிலே அந்த உறவை மேலும் உறுதி செய்வதுதான் என்னுடைய பணி, அந்த பணியை நான் நிச்சயமாக நிலைநாட்டுவேன். சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இட ஒதுக்கீடு குறித்து கோரிக்கை வைத்ததாக கூறிய அவர்,சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீட்டை கலைஞர் பெற்றுக் கொடுத்ததாகவும், சிறுபான்மையர் ஒரு போராட்டம் நடத்தினர் அப்போது முத்தமிழறிஞர் அவர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கி போராட்டத்தை முடித்துக் கொடுத்தார் என்றும் நினைவுபடுத்தினார்.
 

click me!