மத்திய அரசை திணறடிக்கும் தமிழகம்.. ஊசி போட்டு முடிப்பதற்குள் 3வது அலையே வந்துவிடும் போல.

By Ezhilarasan BabuFirst Published Jun 30, 2021, 10:55 AM IST
Highlights

தமிழகத்திற்கு தற்போது வரையிலும் 1,46,37,140 தடுப்பூசிகள் வந்திருக்கும் நிலையில் அதில் 14302200 பேருக்கு நேற்று வரையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெவித்துள்ளது.

தமிழகத்திற்கு தற்போது வரையிலும் 1,46,37,140 தடுப்பூசிகள் வந்திருக்கும் நிலையில் அதில் 14302200 பேருக்கு நேற்று வரையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெவித்துள்ளது. தற்போது வரையிலும் மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசிகளை 98% பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது, சென்னையில் 26,82,450 தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் 25,35,154 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. 

தமிழகத்தில் கொரொனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்த வரும் நிலையில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், தொடர்ச்சியாக தடுப்பூசி தட்டுப்பாடும் நிலவி வருகிறது. மத்திய அரசிடமிருந்து தடுப்பூசி தொடர்ச்சியாக தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் தடுப்பூசிகள் அனைத்துமே மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 45 மாவட்டங்களுக்கும் தற்போது வரையிலும் வழங்கப்பட்ட தடுப்பூசிகளை 98% பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு பொது சுகாதாரத் துறை சார்பாக தெரிவித்துள்ளது. 

குறிப்பாக சென்னையில் 26,82,450 தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருக்கும் நிலையில் அதில் 25,35,154 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்திற்கு 9,40,390 தடுப்பூசிகள் வழங்கியுள்ள நிலையில் அதில் 9,17,792 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஜூன் மாதத்திற்கு 42.58 லட்சம் தடுப்பூசிகள் வரும் என்று தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 39 லட்சம் தடுப்பூசிகள் தற்போது வரையும் வந்துள்ளது. மீதமுள்ள தடுப்பூசிகளும் இந்த மாத இறுதிக்குள் வந்துவிடும் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

 

click me!