சசிகலா மீது கொலை மிரட்டல் வழக்கு... அதிமுகவில் உச்சம் தொடும் களேபரங்கள்..!

Published : Jun 30, 2021, 11:00 AM IST
சசிகலா மீது கொலை மிரட்டல் வழக்கு... அதிமுகவில் உச்சம் தொடும் களேபரங்கள்..!

சுருக்கம்

தொலைபேசியில் அழைத்து என்னையும் என் குடும்பத்தினரையும் தொலைத்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என தெரிவித்திருந்தார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் சசிகலா உட்பட 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதனையடுத்து அதிமுகவை மீண்டும் கைப்பற்ற சசிகலா திட்டமிட்டு வருகிறார். ஆனால் சசிகலாவை அதிமுகவில் ஒருபோதும் சேர்க்கக்கூடாது என கே.பி.முனுசாமி, ஜெயகுமார், எடப்பாடி பழனிசாமி சி.வி.சண்முகம் போன்ற முன்னாள் அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதற்காக தமிழகத்தின் அதிமுக மாவட்டங்களில் சசிகலாவை கட்சியில் சேர்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. 

இதனிடையே விழுப்புரம் அதிமுக மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், சசிகலாவை கடுமையாக விமர்சித்தார். அவரை ஊழல்பேர்வழி, ஊரை கொள்ளையடித்தவர் என்றெல்லாம் விமர்சித்தார். கருவாடு மீன் ஆகலாம்; ஆனால் சசிகலா அதிமுகவில் மீண்டும் சேரவே முடியாது என திட்டவட்டமாக ஆவேசமாக கூறினார்.  இதனையடுத்து கடந்த 9-ம் தேதி விழுப்புரம் அருகே ரோசனை காவல்நிலையத்தில் சி.வி. சண்முகம் ஒரு புகார் கொடுத்தார். அதில் சசிகலாவின் தூண்டுதலின் பேரில் 500க்கும் மேற்பட்டோர் தொலைபேசியில் அழைத்து என்னையும் என் குடும்பத்தினரையும் தொலைத்துவிடுவதாக கொலை மிரட்டல் விடுக்கின்றனர் என தெரிவித்திருந்தார்

.

இந்த புகாரின் அடிப்படையில் தற்போது ரோசனை போலீசார், சசிகலா உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். 501(1),507, 109 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சசிகலா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!