முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா... வீட்டு தனிமையில் சிகிச்சை..!

By vinoth kumar  |  First Published Jun 30, 2021, 11:10 AM IST

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.


விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில்;-கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி எனது இல்லத்தில் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

Tap to resize

Latest Videos

undefined

அடுத்த 15 நாட்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால் விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள் உறவினர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த 10 நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுகிறேன். விருதுநகர் மாவட்டத்தில் யாரும் உட்கட்சி குழப்பம் விளைவிக்க முடியாது. என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை கட்சியினர் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!